மார்ச் 13, 2026 வெள்ளிக்கிழமை காலை. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அழகிய கோடக்கேரி கிராமம். 46 வயதான சஞ்சய் தன் வீட்டில் பைக் சாவியை தேடி பரபரப்பாக இருந்தார்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சாவியை எடுத்துக்கொண்டு குடும்பத்தாரிடம், “பக்கத்து ஊரில் நடக்கும் லட்சுமி திருவிழாவைப் பார்த்துவிட்டு மாலையில் வருகிறேன். மதிய உணவு வேண்டாம்” என்று சொல்லிவிட்டு தன் டூவீலரில் புறப்பட்டார். அது அவரது கடைசி பயணம் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

17-18 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சஞ்சய், 2024 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பினார். ஹெட்கேல் டேம் அருகே ஒரு சிறிய ஹோட்டல் தொடங்கி, குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லாத நடுத்தரக் குடும்பம் அது.
ஆனால், அந்த நாளில், கட்டபிரபா அருகே மலைப் பகுதி சாலையில் பயணம் செய்தபோது சஞ்சய் பைக் சறுக்கி விழுந்தார். உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, உயிருக்கு ஆபத்தில்லாத சில சிறிய காயங்கள் மட்டுமே இருந்தன.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை போதாது என்று கருதி, 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜே.ஜி கோ-ஆபரேட்டிவ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். தனி அறை, ஏசி வசதி, தேவையான மருந்துகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை. சஞ்சய் வழக்கம்போல் உணவு அருந்தி மருந்து சாப்பிட்டார். நர்ஸ் ஐவி ட்ரிப்ஸ் போட்டுவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் ட்ரிப்ஸ் பாட்டில் காலியான பிறகும் சஞ்சய் எழுந்திருக்கவில்லை.
குடும்பத்தினர் பதறி டாக்டரை அழைத்தனர். உடல் குளிர்ந்து, சுவாசம் நின்ற நிலையில் இருந்தது. மருத்துவர்கள் சோதனை செய்து “இதயப் பிரச்சனை” என்று தெரிவித்தனர். குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
போலீஸ் விசாரணை தொடங்கியது. ஆனால், சஞ்சய் தானே விபத்துக்கு காரணம் என்று வாக்குமூலம் கொடுத்திருந்ததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இதயப் பிரச்சனையை உறுதிப்படுத்தியது.

பின்னர் பாரன்சிக் சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்த அறிக்கையும் “இயற்கையான மரணம்” என்றே கூறியது. வழக்கு முடிவுக்கு வந்தது. குடும்பத்தினர் துக்கத்துடன் இறுதிச் சடங்குகளை முடித்தனர்.
ஆனால், உண்மை மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியானது. சஞ்சயின் தம்பி ஜூன் 2026 முதல் வாரத்தில் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதனை தொடர்ந்து, தன்னுடைய அண்ணி சுமாவின் செல்போனை ரகசியமாக ஆய்வு செய்து பார்த்த போது, கள்ளக்காதலனுடன் என்னுடைய அதிக நேரம் உடலுறவு கொண்டு திருப்தி படுத்து.. என்பதில் ஆரம்பித்து காது கூசும் பல வாட்ஸ்அப் உரையாடல்களை பார்த்து அதிர்ந்தார்.
அண்ணனின் மரணத்தில் அண்ணி சுமாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்ற ஆதாரங்களை சேகரித்த அவர் அதை எடுத்துக்கொண்டு உடனடியாக எஸ்பி அலுவலகம் சென்று புகார் அளித்தார். ஸ்டேட்டஸ் போட்டவர் 27 வயதான விட்டல். சஞ்சயுடன் ஹோட்டல் பார்ட்னராக இருந்தவர்.
விசாரணையில் விட்டல் பல தகவல்களைத் தெரிவித்தார். இதனால் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. சஞ்சயின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு புதிய பாரன்சிக் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாயின. சஞ்சய் ராணுவத்தில் இருந்து திரும்பிய பிறகு குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் அவரது மனைவி சுமா (40) மற்றும் விட்டலுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் சேர்ந்து சஞ்சய் பெயரில் இருந்த இன்சூரன்ஸ் தொகை (2 கோடி ரூபாய்) பெறும் திட்டத்தை வகுத்தனர். சஞ்சயை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதும், அங்கு ட்ரிப்ஸ் பாட்டிலில் சில மருந்துகளை கலந்ததும் இந்தத் திட்டத்தின் பகுதி என்று விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை மாற்ற எழுதியதில் சில மருத்துவர் மற்றும் பாரன்சிக் அதிகாரிகள் ஈடுபட்டதும், லஞ்சம் பரிவர்த்தனை நடைபெற்றதும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தச் சம்பவத்தில் சுமாவின் தாயார், ராகுல் உள்ளிட்டோரும் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில் இந்தக் குழுவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதிய பாரன்சிக் அறிக்கையில் உடலில் சில பொருட்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.
இந்தச் சம்பவம் குடும்ப உறவுகள், பண ஆசை மற்றும் அமைப்பு ரீதியான பொறுப்புகள் குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. சஞ்சயின் இரு குழந்தைகள் இப்போது பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
English Summary : In March 2026, 46-year-old former Army man Sanjay passed away in a private hospital in Belagavi, Karnataka after a minor road incident. Initial examinations pointed to natural causes. Three months later, new details prompted a detailed review involving his family and some hospital officials related to insurance documents. Multiple people have been detained for further inquiry.இதையும் படிங்க :
இதையும் படிங்க :