வெளியூரில் கணவன்.. வீட்டில் தனியாக மனைவி.. நினைத்து கூட பார்க்க முடியாத கொடூர மர்மம்..

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நவலை கிராமத்தில் வசித்து வந்த சொர்ணலதா (வயது 35) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் - சொர்ணலதா தம்பதியினருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

குடும்பத்துடன் நவலை கிராமத்தில் வசித்து வந்த மகேந்திரன், கடந்த ஒரு வருடமாக கோவையில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் சொர்ணலதா தனது இரு குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த வரதம்மாள் மகன் வசந்த் (32) என்பவர், சொர்ணலதா தனியாக இருப்பதைப் பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் வீட்டுக் கதவைத் தட்டுவது, அத்துமீறி உள்ளே நுழைய முயற்சிப்பது, சாலையில் பார்க்கும்போது அச்செயல்களைச் செய்வது போன்றவை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் ஒரு நாள் வசந்த் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தபோது, சொர்ணலதா மிளகாய் பொடி தூவி மற்றும் கத்தியைக் காட்டி அவரை விரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினந்தோறும் தனது கணவரிடம் தொலைபேசியில் பேசும்போது, வசந்த் தொடர்ந்து தொல்லை கொடுப்பதால் மன உளைச்சலில் இருப்பதாக சொர்ணலதா தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி மாலை 4.30 மணியளவில் சொர்ணலதா தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக உறவினர்கள் கோவையில் இருந்த மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஊருக்கு வந்த மகேந்திரன், தனது மனைவியின் மரணத்தில் வசந்துக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் அடைந்து கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் நடவடிக்கை

புகாரின் அடிப்படையில் கம்பைநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக சொர்ணலதாவின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், சொர்ணலதா பயன்படுத்திய மொபைல் போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த கட்டமாக வசந்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நவலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முழு விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : In Navali village, Arur taluk, Dharmapuri district, Sornalatha who lived with her two children while her husband Mahendran worked in Coimbatore passed away under mysterious circumstances on June 29. Her husband filed a complaint at Kambainallur police station suspecting local resident Vasanth. Police registered a suspicious death case, sent the body for postmortem examination and are conducting further investigation with the seized mobile phone.