வெளியூரில் கணவன்.. வீட்டில் தனியாக மனைவி.. நினைத்து கூட பார்க்க முடியாத கொடூர மர்மம்..
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நவலை கிராமத்தில் வசித்து வந்த சொர்ணலதா (வயது 35) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் - சொர்ணலதா தம்பதியினருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் நவலை கிராமத்தில் வசித்து வந்த மகேந்திரன், கடந்த ஒரு வருடமாக கோவையில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் சொர்ணலதா தனது இரு குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த வரதம்மாள் மகன் வசந்த் (32) என்பவர், சொர்ணலதா தனியாக இருப்பதைப் பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வீட்டுக் கதவைத் தட்டுவது, அத்துமீறி உள்ளே நுழைய முயற்சிப்பது, சாலையில் பார்க்கும்போது அச்செயல்களைச் செய்வது போன்றவை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஒரு நாள் வசந்த் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தபோது, சொர்ணலதா மிளகாய் பொடி தூவி மற்றும் கத்தியைக் காட்டி அவரை விரட்டியதாகவும் த...