என்னது நெப்போலியன் ஒரிஜினல் பெயர் இதுவா..? என்னங்க சொல்றீங்க.. அதுவும் இவரு தான் இந்த பேரை வச்சதா..?

என்னது நெப்போலியன் ஒரிஜினல் பெயர் இதுவா..? என்னங்க சொல்றீங்க.. அதுவும் இவரு தான் இந்த பேரை வச்சதா..?

தமிழ் திரைப்படங்களில் மிகவும் அற்புதமான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் என்றும் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்து இருக்கும் நடிகர் நெப்போலியனை யாரும் எளிதில் மறக்க முடியாது.

இதையும் படிங்க: சான்ஸ் இல்லாமல் தவிக்கும் சமத்து பாப்பா.. வயசான நடிகருடன் அதற்கு ரெடியாம்..

இவர் பல படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதோடு தமிழக மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட மிகச்சிறந்த மனிதர்.

நடிகர் நெப்போலியன்..

நடிகர் நெப்போலியன் படங்களில் நடித்ததை அடுத்து அரசியலிலும் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த இவர் தற்போது நடிப்பு, அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு தன் மகனுக்காக அமெரிக்காவில் இருப்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.


அப்படிப்பட்ட நடிகர் நெப்போலியன் இயற்பெயர் நெப்போலியன் அல்ல. திரைப்படங்களில் நடிப்பதற்காக பிரபலம் ஒருவர் இவரை பார்த்த பிறகு வைத்த பெயர் தான் நெப்போலியன். அப்படி தன் பெயரை மாற்றிய அந்த பிரபலம் யார் எப்படி நெப்போலியன் என்ற பெயர் பிறந்தது என்ற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

யூடியூபர் இர்ஃபான்..

Youtuber இர்ஃபான் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ருசிக்காத உணவு இல்லை என்று சொல்வது போல இவரது வீடியோக்களில் பல வீடியோக்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு கணக்கில் அடங்காத வியூவர்ஸை பெற்றவர்.

இவரும் அமெரிக்காவுக்கு சென்று நெப்போலியனின் வீட்டை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டார் மேலும் அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களையும் அங்கு அவர் செய்து கொண்டிருக்கும் பணிகளையும் படு விரிவாக போட்டு இருந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவியது அனைவரும் அறிந்தது தான்.


இப்படி அவர் நெப்போலியனை சந்திக்கும் போது தான் அவருக்கு எப்படி இந்த பெயர் ஏற்பட்டது என்பதை நேர்காணலில் கூறியிருக்கிறார்.

நெப்போலியன் யார் வச்ச பெயர் தெரியுமா?

நெப்போலியன் அரசியல் தலைவர் ஒருவருக்கு பிஏவாக இருந்த சமயத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்கு காரணம் இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா நடித்த உதயம் படத்தை பார்த்த பின் இந்த ஆசை அதிகரித்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் தன்னை படத்தில் நடிக்க வைக்க நண்பர் ஒருவர் பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்ற போது என்னுடைய பெயர் குமரேசன் என்று சொன்னதும் என்னுடைய தோற்றத்தை பார்த்து குமரேசன் என்ற பெயர் உனக்கு செட்டாகாது என்று யோசித்து என்னை ஏற இறங்க பார்த்த அவர் நெப்போலியன் என்ற பெயரை வைத்தார்.

இந்தப் பெயர் தான் இன்னும் எனக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றியை பெற்று தந்திருப்பதாக கூறியதோடு தமிழ்நாட்டில் இருந்து ஏன் அமெரிக்கா சென்றார் தன் பிள்ளைக்காக அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது போன்ற கருத்துக்களையும் இர்ஃபானோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


இதையும் படிங்க: இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி..

அத்தோடு அமெரிக்காவின் சிட்டிசன்ஷிப் வாங்கி விட்ட நெப்போலியன் என்றும் தமிழ் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருவதை இர்ஃபான் வெளியிட்ட வீடியோவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இப்படித்தான் இவருக்கு நெப்போலியன் என்ற பெயர் ஏற்பட்டதா? என்பதை ஆச்சரியத்தோடு கேட்டதோடு மட்டுமல்லாமல் எந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து குமரேசன் நெப்போலியன் ஆன கதையை பற்றி வைரலாக பேசி வருகிறார்கள்.