Connect with us

வடிவேலுடன் 21 வருடமாகியும் நடிக்காத அஜித் ! இப்போது வெளியான காரணம்

Ajith, Vadivelu

Actress | நடிகைகள்

வடிவேலுடன் 21 வருடமாகியும் நடிக்காத அஜித் ! இப்போது வெளியான காரணம்

கவுண்டமணி செந்தில் க்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி உச்சத்தைத் தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்பொழுது அதைப் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது.

அந்தப் படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் வைகைப்புயல் வடிவேலு உடன் எந்தப் படத்திலும் இதுவரை நடிக்கவில்லை. இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. 2002ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் அஜித்தின் மாமாவாக நடிகர் வடிவேலு நடித்திருந்தார்.

Ajith, Vadivelu

அஜித்குமார் மற்றும் வடிவேலு கிடையான காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. இந்தப் படம் முழுவதுமே வடிவேலு அவர்கள் அஜித்குமார் ஐ வாடா போடா என்று அழைக்கும் படியான வசனங்களும் காட்சிகளும் தான் அமைந்திருந்தது. ஆனால் வடிவேலு படமாக்கப்பட்ட காட்சிகள் முடிந்த பின்பும் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்தும் அஜித்தை வாடா போடா என்று அதே தொனியில் பேசியுள்ளார்.

இது அஜித்திற்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்துள்ளது. இதனால் இதை அஜித் அந்த படத்தின் டைரக்டர் இடமும் தெரிவித்துள்ளார் டைரக்டர் சென்று வடிவேலுடன் இதுபற்றி கலந்துரையாடியுள்ளார்..நீங்கள் இனி அஜித்தை அவ்வாறு மரியாதை இல்லாமல் கூப்பிடாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

டைரக்டர் கூறிய பிறகும் கூட வடிவேலு தன்னுடைய பேச்சை மாற்றிக் கொள்ளாமல் மீண்டும் அஜித்தை வாடா போடா என்று அழைத்து விட்டார். இதனால் மன வருத்தம் அடைந்த அஜித் அந்த படத்தின் ஷூட்டிங்கில் அதற்குப்பிறகு வடிவேலுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.

ஒரு கட்டத்தில் காமெடியனாக வலம் வந்த வடிவேலு ,தற்பொழுது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இவருக்கு நடிக்கவே வாய்ப்பு கிடைக்கவே இல் லை. ஆனால் அஜித்தோ தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

Ajith, Vadivelu

நடிகர் வடிவேலுவின் சினிமா கேரியர் காணாமல் போனதற்கு அவருடைய பேச்சுவார்த்தைகளும் செயல்பாடுகளும் ஒரு காரணமாக அமைந்தது. தற்பொழுது அஜித்குமார் ஏகே 62 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்தப்படத்தை மகிழ்திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது மேலும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இதற்கு முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அது நடக்காமல் போனது. இதுபற்றி டைரக்டர் மகிழ்திருமேனி கூறுகையில் நல்ல தலைப்பை தேர்வு தேர்வு செய்த பிறகு தலைப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார். தற்பொழுது ரசிகர்கள் இந்தப் படத்தின் அப்டேட்காக காத்திருக்கிறார்கள் மேலும் ஒரு பாகமாகவும் இருப்பிடம் இருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top