Connect with us

ப்பா.. இது உடம்பா..? இல்ல, இரும்பா.? – ஜிம்மில் ஆண்ட்ரியா வெறித்தனம்..! – வைரல் வீடியோ..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Actress | நடிகைகள்

ப்பா.. இது உடம்பா..? இல்ல, இரும்பா.? – ஜிம்மில் ஆண்ட்ரியா வெறித்தனம்..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

பின்னணி பாடகி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை ஆண்ட்ரியா நடிகர் இயக்குனர் கௌதம் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கதை தேர்வில் வித்தியாசம் காட்டுகிறார்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

எனவே இவர் நடிக்கக்கூடிய படங்கள் பலவும் ரசிகர் மத்தியில் நல்ல கவனத்தை பெறுகின்றன குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான தரமணி என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

மிகவும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் செய்தது. சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும் கூட தன்னை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை வளையம் இருப்பதை உறுதிப்படுத்துகிறார் ஆண்ட்ரியா.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

அந்த வகையில் நடிகர் அனிருத்துடன் காதலில் இருந்தார் என்று கூறப்பட்டது. அதுதான் உண்மை என்பதும் கூட. இதனை அனிருத்தே ஒரு பேட்டியில் ஒப்பு கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தார் எனவும் அவரால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்பட்டேன் எனவும் பேசியிருந்தது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

யார் அந்த நடிகர் என்று கேள்வி இணைய வட்டாரங்களை தகிக்க வைத்தது. இப்படி சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் உலா வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது தனிக்கதை.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தி கொண்டே வரும் இவர் தற்போது உடற்பயிற்சி கூடத்தில் இருந்தபடி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மேலும் பிசாசு இரண்டாம் படத்தின் ரிலீஸ் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தனக்கென தனி மார்க்கெட் ஓப்பன் ஆகும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறாராம்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

இந்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,  இந்த படத்தின் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top