Connect with us

லோகேஷின் பிறந்தநாள் இன்று வெளியாகிறது லியோ அடுத்த அப்டேட் !

leo, Vijay

Actress | நடிகைகள்

லோகேஷின் பிறந்தநாள் இன்று வெளியாகிறது லியோ அடுத்த அப்டேட் !

தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மார்ச் 17ஆம் தேதி இவருடைய பிறந்த நாள் கடந்த ஆண்டு இவருடைய பிறந்த நாளன்று விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்கிய இந்தப்படம் எதிர்பார்ப்பையும் மீறி ஹிட்டடித்தது. அதற்குப் பிறகு லோகேஷன் டைரக்ஷனில் பல இந்திய நடிகர்களும் தான் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருந்தார்கள். ஆனால் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு லியோ படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த லியோ டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

leo, Vijay

லோகேஷ் பிறந்தநாளில்  அப்டேட்

அதுபோல இந்த மார்ச் 14 அதாவது நாளை பிறந்தநாள் காணும் லோகேஷ் லியோ படம் சம்பந்தமாக ஏதேனும் ஒரு அறிவிப்பை வெளியிட மாட்டாரா என ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.  நீங்கள் படத்தைப் பற்றிய அப்டேட் விடவில்லை என்றாலும் பரவாயில்லை விஜய் உங்களுக்கு கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படத்தை ஆவது வெளியிடுங்கள் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்பாக இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவது வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் கௌதம் வாசுதேவ் மேனன்,மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், த்ரிஷா என ஒரு திரை பட்டாளமே நடிக்கிறது.

leo, Vijay

ஏற்கனவே ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. மேலும் இந்த படம் LCU விற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  தற்போது இந்த செய்தி இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுபோல பல சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top