Connect with us

53 வயசு..! – இதனால் தான் கல்யாணம் பண்ணிக்கல..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை ஷோபனா..!

Actress shobana, நடிகை ஷோபனா

Actress | நடிகைகள்

53 வயசு..! – இதனால் தான் கல்யாணம் பண்ணிக்கல..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை ஷோபனா..!

நடிகை சோபனா கடந்த 1984 ஆம் வருடம் ஏப்ரல் 18 என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 53 வயது ஆகின்றது.

Actress shobana, நடிகை ஷோபனா

நடிகையாக மட்டும் இல்லாமல் முறைப்படி பரதம் கற்றுக்கொண்டு பல்வேறு அரங்கேற்றங்களை செய்து வரும் இவர் பரதநாட்டிய கலைஞராகவும் அறியப்படுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் தமிழில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மங்களநாயகி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் யாகவி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

Actress shobana, நடிகை ஷோபனா

தமிழில் 20 படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு உண்டான காரணத்தை நடிகை சோபனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மட்டுமில்லாமல் சமீபத்தில் இவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் திருமணமா..? என்று அதிர்ந்து தான் போனார்கள்.

Actress shobana, நடிகை ஷோபனா

ஆனால் திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்ட நடிகை சோபனா கடந்த 2001 ஆம் ஆண்டு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது திருமணம் செய்து முடிவுக்கு வந்திருப்பதாகவும் நீண்ட நாள் நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் சோபனாவின் தரப்பிலிருந்து இது குறித்த எந்த ஒரு தகவலும் வரவில்லை. திருமணமும் இதுவரை நடந்ததாக தெரியவில்லை. எதற்காக இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று இவரிடமே கேள்வி எழுப்பப்பட்டது.

Actress shobana, நடிகை ஷோபனா

இதற்கு பதில் அளித்த நடிகை சோபனா திருமண வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை கிடையாது. திருமணம் செய்து கொள்வதால் என்னுடைய சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இப்படியான காரணங்களால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் நான் தவிர்த்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top