இந்தியாவுல MP யா இருக்குறது ரொம்ப கஷ்டம் ! காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சு

காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் தலைவரான ராகுல் காந்தி ஒரு வாரம் சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு போயிருக்காரு அங்க ரொம்பவே புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற்றியிருக்கிறார்.

அங்க பேசுகையில் இந்தியாவில் ஜனநாயக அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஒரு மென்பொருளை பயன்படுத்தி எதிர்கட்சிகள்  உளவு பார்க்க உதவும் அப்டின்னு குற்றம்சாட்டி உள்ளார்.

அதே மாதிரி இந்தியாவுக்கு சொந்தமான 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடத்தை சீனா ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளதாகவும் ,அதை இந்த ஒன்றிய அரசு மக்களிடையே மறைக்கிறது அப்படின்னு அந்த உரையில் அவர் பேசி இருக்காரு. தன்னை வலிமையான தலைவராக காட்டிக்கொள்ள நரேந்திர மோடி, சீனாவில் பெயரைச் சொல்வதற்கே பயப்படுகிறார். இதனாலேயே சீனா என்னவோ இந்தியா ஓட இடத்தை மேலும் ஆக்கிரமிக்கிறது.

ராகுல் காந்தியின் இந்த பேச்சை கேட்டு பாஜக கட்சியில் இருக்கிற பிரமுகர்கள் எல்லாம் இங்கிலாந்தில் போய் இந்தியாவை ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார் எனவும், இந்த மாதிரியான எண்ணம் எங்களுக்கு இல்ல அப்படின்னும் சொல்றாங்க.

இதன் பிறகு ராகுல் காந்தி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசும்போது இந்தியாவில் எம்பி யாக இருப்பது ரொம்ப கடினமான விஷயம். நான் ஆரம்ப காலகட்டத்தில் அரசியலுக்கு வரும்போது எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. எந்த இந்தியனும் அவரவர் நினைக்கிறதை சொல்லமுடியும். அப்படின்னு நான் நம்பினேன்.

--Advertisement--

 

ஆனால் இப்போது அப்படி என்னால் நினைக்க முடியவில்லை சுதந்திரமான உரையாடல்கள் இப்பொழுது அடக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இந்த இரண்டுக்கும் இடையே இந்திய தேர்தல் ஆணையம் சிபிஐ அமலாக்கத் துறை நீதித்துறை என எல்லாமே மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். இதனாலேயே தான் நான் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பிச்சு காஷ்மீர் வரைக்கும் மேற்கொண்ட மேற்கொண்டேன்.

இந்த பாரத்ஜூடோ யாத்திரையின் முக்கியமான கருத்து என்னன்னா இந்தியா மீண்டும் பேசத் தொடங்கவேண்டும் உரையாடல் விவாதம் என அனைத்து சுதந்திரமும் இந்தியர்களுக்கு கிடைக்கணும். மேலும் அங்கு ஒற்றுமையாகவும் இருக்கணும் அப்படிங்கிற தான் இதோட அர்த்தம் காங்கிரஸ் கட்சி அப்படிங்கறது ஒரு சித்தாந்தம். பாஜகவை விட பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்துள்ளோம்.

பாஜகவை யாராலும் ஜெயிக்க முடியாது அப்படின்னு சொல்றது வெறும் கட்டுக்கதை தான் நான் நம்புறேன். நான் அடித்தட்டு மக்கள் கிட்ட பேசுறேன் ஆனால் பாஜக அப்படி இல்லை நாட்டை நாசமா ஆக்குகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார். இதுபோல பல முக்கியமான அரசியல் செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.