“வீட்டு தோட்டத்தில் கத்திரியை எப்படி பதியம் போட்டு பாருங்க..!” – நல்ல ரிசல்ட் தரும்..!

உங்க வீட்டு தோட்டத்தில் எண்ணற்ற செடிகளையும், கொடிகளையும், பூச்செடிகளையும் வளர்த்து வருவீர்கள். அந்த வரிசையில் காய்கறிப் செடிகளையும் நீங்கள் வளர்த்து வரலாம்.

 வீட்டில் எளிதாக வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்ற செடிகளை நீங்கள் வளர்த்து வந்தால் அதில் குறிப்பாக உடலில் இருக்கும் கொழுப்புக்களை குறைக்க உதவும் கத்திரியை எப்படி வளர்க்கலாம் என்பதை பற்றி எந்த கட்டுரைகள் பார்க்கலாம்.

கத்திரியை பொருத்தவரை எண்ணற்ற வகைகள் இதில் காணப்படுகிறது. எனவே உங்களுக்கு பிடித்தமான கத்திரி  வகையை நீங்கள் தேர்வு செய்து அதற்கான விதைகளை நீங்கள் கடையில் இருந்து பெற்று வாருங்கள்.

 பிறகு எந்த கத்திரி விதையை நீங்கள் நீரில் போட்டு நன்கு அலசி விட்டு மண் இருக்கும் பகுதியில் அல்லது ஒரு தொட்டியில் மண் கொட்டி நீங்கள் தூவி விடுங்கள்.

 அப்படி தூவி முடித்த ஒரு வாரத்துக்கு போதிய அளவு நீரை மறவாமல் நீங்கள் ஊற்ற வேண்டும். ஒரு வார இடைவெளிக்குப் பிறகு கத்திரி நாற்றுக்கள் இந்த கத்திரி விதையிலிருந்து வெளிவரும். இதை பக்குவமாக நீங்கள் ஒவ்வொன்றாக தனித்தனியாக பிரித்து எவ்வளவு செடிகள் உங்களுக்கு தேவையோ அதை தொட்டியிலோ அல்லது மண்ணிலோ நடவு செய்து விடலாம்.

--Advertisement--

 நடவு செய்த பிறகு எந்த கத்திரி செடிக்கு தேவையான உரம் மற்றும் நீரை நீங்களும் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்து வாருங்கள். மேலும் கண்டிப்பாக இந்த கத்திரிச் செடியை ஆரம்ப நாட்களில் இளம் வெய்யில் வைத்தால் போதுமானது.

 இதனை அடுத்து 45 நாட்களில் கத்திரி செடி உங்களுக்கு தேவையான கத்திரிக்காயை கொடுக்க கூடிய அளவு வளர்ந்து விடும். 45 நாட்களுக்குள் உங்களுக்கு தேவையான கத்திரியை தருவதால் நீங்கள் அந்த கத்திரிக்காயை உங்கள் வீட்டு உணவில் சேர்த்து சமைக்க முடியும்.

 இந்த கத்திரிக்காய்க்கு தேவையான உரத்தை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரித்து போடுவதின் மூலம் உரங்களை கூட நீங்கள் வெளியே இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

 

அது போலவே வீட்டிலேயே நீங்கள் இயற்கை முறையில் பூச்சிக்கொல்லிகளை தயாரித்தால் செடியில் பூச்சி தொல்லை ஏற்பட்டாலும் அதை நீக்கிவிடலாம். இந்த முறைகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கத்தரிச்செடிகளை வளர்த்து பயன்பெறுங்கள்.