உடன் பிறந்த அண்ணனை திருமணம் செய்த நடிகை.. காரணம் தெரிஞ்சா தூக்கி வரிப்போடும்..

உடன் பிறந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை.. காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் மக்கள் நலத்திட்ட வளர்ச்சி பணிகளை செய்து வருகின்றன.

இதில் தமிழக அரசு தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டம், இலவச மகளிர் பஸ் பயணம், மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள், லேப்டாப் வழங்குதல், முதியோர் உதவித்தொகை என பலவிதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இதில், சொந்த அண்ணன், தங்கைக்கு திருமணம் செய்து வைத்து இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

விவாஹ யோஜனா திட்டம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில், விவாஹ யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைத்து, நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. உத்தரபிரதேச மாநில அரசு மக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

--Advertisement--

இதையும் படியுங்கள்: சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

மேலும் திருமணம் செய்து வைக்கப்படும் தம்பதிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களும், ரொக்கமாக ரூ. 35 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இடைத்தரகர்கள் மோசடி

இந்த நிதியை பெறுபவதற்காக இடைத்தரகர்கள், இதில் மோசடி செய்கின்றனர். திருமணமானவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்து, பணத்தை லவட்டி விடுகின்றனர்.

இந்த சூழலில், ஏற்கனவே திருமணமான அண்ணனுக்கு, அவரது சொந்த தங்கையை திருமணம் செய்து வைத்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்தின் முகம்.. வைரல் புகைப்படம்..

38 ஜோடிகளுக்கு திருமணம்

லட்சுமிபூர் தொகுதியில் முதல்வர் திருமண திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 5ம் தேதி, 38 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த திருமணங்கள் நடந்த பிறகு, மணமக்களுக்கு ரூ. 35 ஆயிரம் பணத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திருமண நாளன்று, மணமகன் ஒருவர், திருமணம் நடந்த மண்டபத்துக்கு வரவில்லை.

மணமகளின் அண்ணனையே …

கடைசி நேரத்தில் மணமகன் வராததால், வேறு வழியின்றி அந்த அவசர நேரத்துக்கு வேறு நபரை பிடிக்க முடியவில்லை. இதனால் அங்கு இருந்த மணமகளின் அண்ணனையே மணமகனாக்கி விட்டனர். சொந்த அண்ணனுக்கே, தங்கையை திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர்.

ஏற்கனவே திருமணமான அண்ணனுக்கு, முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் தங்கையை திருமணம் செய்து வைத்தனர். இதை பார்த்து அங்கிருந்த சிலர் பலத்த அதிர்ச்சியடைந்தனர்.

அதிகாரி நடவடிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்த மஹராஜ் கஞ்ச் பகுதியை சேர்ந்த வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு சார்பில் அந்த தம்பதிக்கு வழங்கிய பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்தார். தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

உபி அரசு வழங்கும் பொருட்கள், பணத்துக்காக உடன் பிறந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை குறித்த செய்தியால் பலரும் திடுக்கிட்டு போய்விட்டனர்.