“நீங்க செஞ்ச சாப்பாடு தீஞ்சு போச்சா..!” – டோன்ட் ஒரி தீய்ந்த உணவு ஈஸியா இப்படி சரி பண்ணுங்க..!

சமையல் அறையில் சமைக்கும் போது வேறு ஏதேனும் பணி நிமித்தமாகவோ அல்லது மறதியாகவோ நீங்கள் சமைக்க கூடிய சமையல் பொருளானது தீய்ந்து போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆசை ஆசையாக வைத்த குழம்பு தீர்ந்து விட்டால் உங்கள் மனநிலை ஒருவிதமாக மாறிவிடும் எனவே அதைப் பற்றி இனி கவலைப்படாமல் நீங்கள் அப்படி தீய்ந்து போன உணவை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

தீய்ந்த உணவை சரி செய்யும் முறை

உங்கள் தீய்ந்து போன உணவை சரி செய்ய அது குழம்பாக இருக்கும் பட்சத்தில் அதில் நீர் அல்லது தேங்காய் பாலை கலந்து நீங்கள் சரி செய்து விடலாம். இதன் மூலம் அந்த குழம்பு ருசியாக மாறிவிடும். மேலும் தீண்ட வாடை எதுவும் அடிக்காது.

அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் வெல்லம் அல்லது சர்க்கரை சிறிதளவு குழம்பில் சேர்ப்பதின் மூலம் தீய்ந்த உணவின் சுவையை அது சமநிலைப்படுத்தி விடும்.

வேறு இனிப்பு பழம் ஏதேனும் ஒன்று அது மாம்பழமாகவோ, அண்ணாச்சி பழமாகவோ இருந்தால் அதைக் கூட நீங்கள் அந்த பொருட்களில் கலந்து விடுங்கள். இதன் மூலம் தீய்ந்து போன குழம்பு ஒரு மாற்றமான சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.

--Advertisement--

மேலும் தீயாந்திருக்கும் குழம்புடன் நீங்கள் தயிரை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு நடுநிலையான நன்மை கிடைக்கும். இதன் மூலம் குழம்பு கெட்டியாக மாறி புளித்த சுவை லேசாக ஏற்பட்டு உங்கள் குழம்பின் சுவையை கூட்டும்.

உருளைக்கிழங்கு இருந்தால் அந்த உருளைக்கிழங்கை வேக வைத்து தீய்ந்து போன பண்டத்தில் சேர்த்து விடுவதின் மூலம் குழம்பு லேட்டாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் தீர்ந்து போன சுவை தெரியாது.

மேற்கூறிய இந்த குறிப்புக்களை நீங்கள் கட்டாயம் ஃபாலோ செய்து பாருங்கள். இனிமேல் குழம்பு தீய்ந்து விட்டால் கவலை இல்லாமல் இதுபோல எளிதில் மாற்றி விடலாம். யாராலும் எளிதில் அதை கண்டுபிடிக்க முடியாது.