திருமணம் வரை சென்ற உறவு.. திடீரென வந்த கொடிய நோய்.. ஓப்பனாக கூறிய நடிகை கௌசல்யா..!

திருமணம் வரை சென்ற உறவு.. திடீரென வந்த கொடிய நோய்.. ஓப்பனாக கூறிய நடிகை கௌசல்யா..!

90 கிட்ஸ் விரும்பும் நடிகைகளில் ஒருவர் யார் என்றால் அது நம் கௌசல்யா அக்கா தான். பார்ப்பதற்கு படு ஹோம்லி அப்பியரன்சில் இருக்கும் நடிகை கௌசல்யா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து தனக்கு என்று ரசிகர் படையை வைத்திருப்பவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் இவர் செய்த கேரக்டர் ரோல் திரையுலகம் உள்ளவரையும் ரசிகர்களால் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் என கூறலாம்.

இதனை அடுத்து திடீரென சினிமா உலகை விட்டு ஒரு நீண்ட பிரேக்கை எடுத்துக் கொண்டார். இதற்கான காரணம் என்ன என்று தெரியாத போது வெளி வந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

அட.. இது நம் கௌசல்யாவா? என்று பலரும் வாய் அடைத்துப் போகக் கூடிய அளவு தோற்றத்தில் பெருத்த மாற்றத்தை இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பறை சாற்றியது.

இதற்குக் காரணம் திடீரென்று உடல் எடை கூடியதோடு மட்டுமல்லாமல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த இவர் 105 கிலோ வரை உடல் எடை அதிகரித்ததை பற்றி கூறியிருந்தார்.

--Advertisement--

ஏறத்தாழ 30 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் திருமணம் வரை சென்ற உறவு, திடீரென ஏற்பட்ட கொடிய எளிதில் தீர்க்க முடியாத நோயான உடல் எடை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணத்தால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் நின்று போய் விட்டது என்ற உண்மையை ஓபன் ஆக பகிர்ந்திருக்கிறார்.

மேலும் திருமணம் என்பது ஒரு அழகிய பந்தம், ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்பதை பதிவு செய்து இருக்கும் நடிகை கௌசல்யா தற்போது 43 வயதை எட்டிவிட்டார். நீங்கள் அண்மையில்  சுந்தரி சீரியலில் கௌசல்யா நடித்து இருந்ததை  பார்த்திருக்கலாம்.

எல்லோரையும் மகிழ்வித்த கௌசல்யாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையால் திருமணம் நடக்காமல் நின்று விட்டதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் திரைப்படங்களில் நடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.

இன்று உலகம் முழுவதுமே உடல் பருமன் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வரக்கூடிய வேளையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதிக்க கூடிய அளவு ஒபிசிட்டி என்று அழைக்கப்படும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அனைவரும் கட்டாய உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.