கோலிக்கு வந்த சோதனை…!!அட்வைஸ் கொடுத்த ஆஸ்திரேலியாவின் மார்க் வாக்..!!

கோலிக்கு வந்த சோதனை:டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. கடந்த 15 இன்னிங்ஸ்களில் அவரால் ஒரு சதம் அடிக்க முடியவில்லை, ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை.

2019 நவம்பரில் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக கோஹ்லி கடைசியாக டெஸ்ட் சதம் அடித்தார். அப்போதிருந்து அவர் ரெட் பால் கிரிக்கெட்டில் சரியாக விளையாடவில்லை.அவரது சராசரி 25.70 மற்றும் அவரது அதிகபட்ச ஸ்கோர் 79 மட்டுமே. இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கவலை தெரிவித்துள்ளார்.

 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட, கோஹ்லி ஒவ்வொரு இன்னிங்ஸிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார், ஆனால் தற்போது நடக்கும் தொடரில் அவரால் அணியை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. இந்தூரில் நடந்த இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ​​அவர் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து நன்றாக ஆரம்பித்தார் ஏனோ தெரியவில்லை அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை திடீரென்று குஹ்னேமானிடம் வீழ்ந்தார்.

--Advertisement--

கோஹ்லியின் இந்த சதங்களின் வறட்சியை கண்டு இந்திய ரசிகர்களுடன் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீரர் மார்க் வாக் ஆச்சரியமடைந்துள்ளார். மேலும் மார்க் வாக்
கோலி ஒரு திறமையான வீரர் அவர் இவ்வளவு நாள் சதம் ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது என்னால் நம்ப முடியவில்லை” என்று முன்னாள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மார்க் வாக் ஃபாக்ஸ் கிரிக்கெட்டில் கூறினார்.

மேலும், அவர் விராட் கோலி அவுட் ஆன விதம் பற்றி விளக்கினார்.அவருக்கு போட பட்ட பந்து அவருக்கு நேராக வீச பட்ட பந்து..கோலி எதிர்பாராத விதமாக பேக் ஃபுட் போட்டு ஆடியதால் அது நேராக அவரது பேடில் பட்டு அவுட் கொடுக்க பட்டது.அந்த தவறினால் தான் விராட் கோலி வெளியேறினர் என்று மார்க் வாக் கூறினார்.