சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் லீக்..! கேடி கேங் செய்த சித்து வேலை..!

சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் லீக்..! கேடி கேங் செய்த சித்து வேலை..!

தற்போது திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளின் போட்டோக்களை அதீத தொழில்நுட்பமான டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரிப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவரின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் லீக் ஆகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு அந்த நடிகை இது குறித்து கதறி அழுதிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை..

சீரியல் நடிகையான இவர் தமிழ் சீரியல்களில் மாமியாராகவும், அம்மா கேரக்டர்களை பக்காவாகவும் செய்து இருக்கிறார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தொலைக்காட்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.


இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் கதறி அழுது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். இந்த வீடியோவில் தனது புகைப்படத்தை தவறாக மாஃபிங் செய்து யாரோ என் வாட்ஸ் அப் எண்ணில் அனைவருக்கும் அனுப்பி இருக்கிறார்கள்.

இணையத்தில் லீக்கான ஆபாச புகைப்படங்கள்..

மேலும் இந்த விஷயம் எப்படி நடந்தது என்பதை தற்போது விரிவாக கூறியிருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்பாக இவருக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜில் 5 லட்சம் ரூபாய் பணத்தை நீங்கள் வென்றிருக்கிறீர்கள் என்ற செய்தி இருந்துள்ளது.

நானும் அதீத ஆசை காரணத்தால் அந்த லிக்கை ஓபன் செய்தவுடன் ஒரு ஆப் தானாகவே டவுன்லோட் ஆனது. இதனை அடுத்து என் மொபைல் போனும் ஹேக் செய்யப்பட்டு இருந்த விஷயம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிந்தது.

--Advertisement--


இதனை அடுத்து 5000 ரூபாய் லோன் வாங்கி உள்ளதாகவும் எனக்கு குறும் செய்தி வந்தது. இதனை அடுத்து என்னிடம் ஆபாசமாக பேசி பணம் செலுத்தவில்லை என்றால் வாட்ஸ் அப்பில் இருக்கும் புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என்று மிரட்டினார்கள்.

அப்போது தான் விஷயம் எவ்வளவு படு மோசமானது என்பதை உணர்ந்து கொண்டு ஹைதராபாத்தில் உள்ள சைபர் கிரைனில் புகார் அளித்தேன். இதனை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் உள்ள நண்பர்களுக்கு என் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அனுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் என் பெற்றோர்களுக்கும் அந்த புகைப்படத்தை அனுப்பியதை அடுத்து என்னால் அந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

இவ்வளவு தைரியமாக இருக்கக்கூடிய நபரும் இது போன்ற சிக்கலில் சிக்கிக் கொண்டால் கட்டாயம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதோடு மட்டுமல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விடுவார்கள்.

எனவே நீங்களும் உங்கள் மொபைல் போனுக்கு இது போன்ற ஏதாவது குறும் செய்தி வந்தால் கட்டாயம் அதை ஓபன் செய்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி ஓபன் செய்தால் உங்களது மொபைல் ஹேக் செய்யப்படும்.


எனக்கு நேர்ந்த இந்த அவலத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் இது நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான். இது பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை காவல்துறையினர் அனுப்பினால் பாதிப்புகளை தடுக்கலாம்.

மேலும் இது போன்ற மெசேஜ்கள் வந்தால் கட்டாயம் காவல்துறையிடம் புகார் கொடுங்கள். அப்போது தான் வேறு யாருக்கும் இதனை அவர்களால் அனுப்ப முடியாது என்று கூறியிருக்கிறார்.

அந்த சீரியல் நடிகை வேறு யாருமில்லை லட்சுமி வாசுதேவன். இவருக்கு நேர்ந்த நிகழ்வு மற்றவர்களுக்கும் நடக்காமல் இருக்க அவர் கூறிய விஷயங்களை ஃபாலோ செய்வது அவசியமானதாகும்.