Connect with us

” கூந்தல் ஆரோக்கியத்துக்கு போடுங்க செம்பருத்திப்பூ ஹேர் மாஸ்க்..!” – எப்படி செய்வது பார்க்கலாமா?

hibiscus, Hibiscus hair mask, Hibiscus hair mask making method, செம்பருத்தி, செம்பருத்தி ஹேர் மாஸ்க்

Beauty Tips | அழகு குறிப்புகள்

” கூந்தல் ஆரோக்கியத்துக்கு போடுங்க செம்பருத்திப்பூ ஹேர் மாஸ்க்..!” – எப்படி செய்வது பார்க்கலாமா?

 பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உள்ளதா இல்லை செயற்கையாக தான் மனம் வருகிறதா என்ற  சந்தேகத்தை கிளப்பிய பாண்டிய மன்னனுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்றைய காலத்தில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அந்த கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியமான பொருளாக இருக்கக்கூடிய செம்பருத்தி யை கொண்டு செம்பருத்தி ஹேர் மாஸ்கை செய்து கூந்தல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்த முடியும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

hibiscus, Hibiscus hair mask, Hibiscus hair mask making method, செம்பருத்தி, செம்பருத்தி ஹேர் மாஸ்க்

 இந்த ஹேர்  மாஸ்க்கை பயன்படுத்துவதின் மூலம் முடி உதிர்தல், இளநரை ஏற்படுத்துதல், முடிவெடித்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் நிவாரணம் பெற முடியும்.

செம்பருத்தி ஹேர் மாஸ்க் தயாரிக்க தேவையான பொருட்கள்

1.செம்பருத்தி பூ 50

2.இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

இதையும் படிங்க :  "என்னது.. முகத்தை சோப்பு போட்டு கழுவ கூடாதா..!" - இத்தன நாள் தெரியமா போச்சே..!

 செய்முறை

hibiscus, Hibiscus hair mask, Hibiscus hair mask making method, செம்பருத்தி, செம்பருத்தி ஹேர் மாஸ்க்

முதலில் செம்பருத்தி பூவை நீங்கள் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து இதனோடு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும்.

 இப்போது இந்த இரண்டு பொருட்களையும் சரியான விகிதத்தில் நன்கு கலந்து விடுங்கள். பிறகு இந்த இரண்டு பொருட்களும் கலந்ததை அடுத்து நீங்கள் இதனை எடுத்து உங்கள் உச்சம் தலையில் முடியின் வேர்க்கால்கள் வரை இந்த செம்பருத்தி கலவையானது செல்லும்படியாக நல்ல மசாஜ் செய்து அப்படியே தேய்த்து விடவும்.

உச்சந்தலை முதல் முடியின் நுனிவரை இந்த செம்பருத்தி ஹேர் மாஸ்கை நன்கு அப்ளை செய்து விட்டு குறைந்தது அரை மணி நேரமாவது அப்படியே இருங்கள்.

இதையும் படிங்க :  " 5 நிமிஷம் தான் தக்காளி வச்சு முகத்தை .!" - வெள்ளையாக்கும் வித்தைய கத்துக்கோங்க..!!

hibiscus, Hibiscus hair mask, Hibiscus hair mask making method, செம்பருத்தி, செம்பருத்தி ஹேர் மாஸ்க்

 செம்பருத்திக்கு குளிர்ச்சி தன்மை அதிகம் இருப்பதால் நீங்கள் மதிய வெயில் நேரத்தில் இது போன்ற பேக்கை போடுவது மிகவும் சிறப்பாகும். இல்லை என்றால் சளி உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் இந்த பேக் ஓரளவு காயும் வரை அப்படியே விட்டுவிட வேண்டும், பிறகு குளிர்ந்த நீரில் நீங்கள் உங்கள் தலையை நன்கு அலசி விடவும். இதனைத் தொடர்ந்து மாதத்தில் இரண்டிலிருந்து நான்கு முறை செய்து வர உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக நீண்ட கூந்தலாக வளர்வதோடு பொடுகு தொல்லை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

 ஆரோக்கியமான முடியினை கொடுக்கக்கூடிய எந்த செம்பருத்தி ஹேர் மாஸ்கை உங்கள் வீட்டிலேயே நீங்கள் பைசா செலவில்லாமல் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top