Beauty Tips | அழகு குறிப்புகள்
“உங்க ஸ்கின் டோன் அதிகரிக்க வேண்டுமா..!” – குளிக்கும் போது தினமும் இத தடவுங்க ..!!
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. எனவே சுட்டு எரிக்கும் வெயிலில் நீங்கள் செல்லும்போது உங்கள் சருமம் கருப்படைவதற்கான சூழ்நிலைகள் அதிகரிக்கும்.
எவ்வளவுதான் சன் ஸ்கிரீன் லோஷனை நீங்கள் பயன்படுத்தினாலும் வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படக்கூடிய சில மாற்றங்களை உங்களால் தவிர்க்க இயலாது.
அப்படிப்பட்ட நீங்கள் எளிமையான முறையில் உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் ஸ்கின் டோனை அதிகரிக்க இந்த பொருளை அதுவும் தினமும் குளிக்கும் போது நீங்கள் இதை பயன்படுத்தி வந்தால் கட்டாயம் உங்கள் ஸ்கின் டோன் அதிகரித்து வெள்ளை வெளேர் என்று காட்சி அளிப்பீர்கள்.
இதற்காக நீங்கள் சிவப்பு சந்தன பொடி மற்றும் வீட்டில் இருக்கும் தயிரை பயன்படுத்தினாலே போதுமானதாகும். மேலும் இந்த தயிரானது சருமத்திற்கு தேவையான குளிர்ச்சியை தருவதால் நீங்கள் இந்த தயிருடன் சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி உங்கள் சருமத்தை மேலும் அழகு படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இந்த சிவப்பு சந்தனம் தயிருடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நன்கு டேஸ்ட் பதத்திற்கு வரும்படி கலந்து கொள்ளவும். இது நன்கு கலந்த பிறகு நீங்கள் அதாவது அரை ஸ்பூன் அளவுக்கு கிளிசரினை சேர்த்து நன்கு பேஸ்ட் பதம் வரும் வரை கலக்கவும். இப்போது இந்த கலவையை நீங்கள் உங்கள் முகத்தில் அப்ளை பண்ணவும்.
இது கெட்டியாக இருக்கக்கூடிய பட்சத்தில் நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரையும் சேர்த்துக்கொண்டு நன்கு கட்டி இல்லாமல் பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து உங்கள் முகம் மற்றும் கை கால் போன்ற பகுதிகளில் அப்ளை செய்து கொள்ளலாம்.
இதனை அப்படியே ஒரு கால் மணி நேரம் விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகம் மற்றும் கைகால் பகுதிகளை நீங்கள் கழுவி விடுங்கள் இதனை தொடர்ந்து குளிக்கும்போது நீங்கள் செய்து வருவதால் உங்கள் ஸ்கின் டோன் அதிகரித்து அழகில் ஜொலிப்பீர்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!