மாம்பழம் இருக்கா? அப்ப அத உங்க பியூட்டியை அதிகரிக்க யூஸ் பண்ணுங்க..!

முக்கனிகளில் ஒன்றாக திகழும் மாம்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது .குறிப்பாக கோடையில் அதிக அளவு மாம்பழம் கிட்டும். இதில் பல வகைகள் இருப்பதால்  நீங்கள் விரும்பும் வகையை  சுவைக்கலாம்.

 இப்படிப்பட்ட இந்த மாம்பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள் உங்கள் சருமத்திற்கு மினுமினுப்பை தரக்கூடிய ஆற்றலை பெற்றதோடு மட்டுமல்லாமல் சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

அழகுக் கலையில் மாம்பழம்

அழகுக் கலையில் மாம்பழத்தின் பங்கு அளப்பரியது. இது சருமத்துக்கு மிகச் சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. மாம்பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ சத்தானது சருமத்தில் ஏற்படக்கூடிய வறட்சியை தடுக்க உதவி சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்துக்கொள்ள உதவி செய்கிறது.

 இந்த மாம்பழத்தை நீங்கள் பேஸ் பேக்காக பயன்படுத்துவதன் மூலம் முகம் மிருதுவாக மாறுவதோடு மட்டுமல்லாமல் பளபளப்பாகவும் மாறும்.

 இது முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடக்கூடிய குணம் கொண்டது. இதற்கு காரணம் இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. மாம்பழத்தை அப்படியே எடுத்து கூழாக்கி உங்கள் முகத்தில் தேய்த்து விட்டால் போதும். முகப்பரு வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

--Advertisement--

 வைட்டமின் ஏ,வைட்டமின் சி சத்து மாம்பழத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் வைட்டமின் கேயும் அதிக அளவுள்ளது. இந்த வைட்டமின் கேயானது கண்ணுக்கு கீழ் இருக்கக்கூடிய கருவளையம் நீக்கக்கூடிய சக்தி உள்ளது.

மேலும் வீக்கத்தை குறைக்க இது உதவும். எனவே கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தில் மாம்பழக் கூழை தேய்ப்பதின் மூலம் கருவளையம் குறைந்து வீக்கம் மாறும் முகத்தில் வயதான தோற்றத்தை தரும் முகச்சுருக்கங்களை நீக்கக்கூடிய ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு.

 இதன் மூலம் முன்கூட்டியே வயதாவதை இது தடுக்க உதவி செய்வதால் உங்களுக்கு கோடையில் கிடைக்கும் மாம்பழத்தை கட்டாயம் உங்கள் முக அழகுக்காக ஒரு முறையாவது பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஏற்படும் மாற்றம் நன்றாக தெரியும்.