” கோடையில் உடலுக்கு குளிர்ச்சிய அள்ளி தரும் ராகி கூழ் ..!” வீட்டில் செஞ்சு அசத்துங்க..!!

கோடை வந்து விட்டாலே எண்ணற்ற பிரச்சனைகள் எழுந்து வரும்.  அதிலும் சூடு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எளிதில்  தீர்க்க உதவுவதில்  ராகிக்கு பெரும் பங்கு உள்ளது.

 இந்த ராகி பல காலமாக நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் அரிசியின் ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ராகியின் அவசியத்தை அப்படியே மறந்து விட்டோம்.

எண்ணற்ற சத்துக்கள் இருக்கக்கூடிய இந்த ராகியில் ராகி கூழ் எப்படி செய்து பருகலாம் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த ராகி கூழை மதிய நேரத்திலும் காலை நேரத்திலும் நீங்கள் சாப்பிடுவதின் மூலம் அதிக நா வறட்சி ஏற்படாது. அது மட்டுமல்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைப்பதோடு உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

ராகி கூழ் செய்ய தேவையான பொருட்கள்

1.ராகி மாவு நான்கு டேபிள் ஸ்பூன்

--Advertisement--

2.தண்ணீர் இரண்டு சொம்பு

3.உப்பு தேவையான அளவு

4.தயிர் தேவையான அளவு

செய்முறை

முதலில் ராகி மாவை ஒரு சொம்பு நீரில் கட்டி இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து நீங்கள் அடுப்பில் கலந்து வைத்திருக்கும் அந்த ராகி மாவு கலவையை அப்படியே வைத்து இளம் தீயில் சூடு படுத்தவும்.

 ராகி மாவு நன்கு வேகம் வரை காத்திருக்கவும். அடுப்பை ஹை ஃப்ளேமில் வைக்க வேண்டாம். ஸ்விமிலையே இதை இருக்கட்டும்.

 இப்போது ராகி மாவு வெந்து வருவதற்கான பதம் தெரிந்தவுடன், நீங்கள் நீர் தேவை என்றால் சற்று கலந்து வேக விடவும். சிறிது நேரம் கழித்த பின்பு அந்த கலவையை உங்கள் கையால் தொட்டுப் பாருங்கள்.

 மாவு உங்கள் கையில் ஒட்டியது என்றால் மீண்டும் சிறிது நீர் கலந்து நன்கு வேக விடவும். போதும் மீண்டும் அதே பதத்தில் உங்கள் கையை கொண்டு ராகி மாவை தொட்டுப் பாருங்கள். அது உங்கள் கையில் ஒட்டவில்லை என்றால் நன்கு வெந்து விட்டது என்று அர்த்தம்.

மேலும் மீதி இருக்கும் நீரை ஊற்றி சிறிது நேரம் சூடு செய்யவும். அதன் பிறகு இதை கீழே இறக்கி வைத்து போதுமான அளவு தயிர் மற்றும் உப்பினை சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடான சுவையான ராகி கூழ் தயார்.

உங்களுக்கு தேவை எனில் இதோடு பச்சை வெங்காயத்தையும் போட்டு அப்படியே நீங்கள் குடிப்பதன் மூலம் உங்கள் உடல் வெப்பநிலையை உங்களால் சரியாக பராமரிக்க முடியும்.