இந்திய பேட்ஸ்மேன்களை விலசிய ரோஹித்..!!!

இந்திய பேட்ஸ்மேன்களை விலசிய ரோஹித்:இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான திருப்பத்தை எட்டியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் 9 விக்கெட்டுகள் 155 ரன்களுக்கு சரிந்தன. புஜாராவைத் தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் அதிக நேரம் களத்தில் நிலைக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா பேட்ஸ்மேன்களிடம் கொந்தளித்தார். பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் விக்கெட்களை பரிகொடுத்தனர். இதனை பார்த்த ரோஹித் சர்மா உடனடியாக அதிரடியாக ஆடினார்.144 ரன்களுக்கு இந்திய அணியின் 7 விக்கெட்டுகள் சரிந்தன. புஜாரா 52, அக்சர் படேல் 3 ரன்களுடன் விளையாடி வந்தனர். அப்படிப்பட்ட நிலையில், இரு பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அணுகுமுறை பார்த்து கேப்டன் ரோஹித் மகிழ்ச்சியடையவில்லை. அவர் அருகில் இருந்த இஷான் கிஷனை அழைத்தார். இஷான் அவன் அருகில் அமர்ந்ததும் அவரிடம் ஏதோ விளக்கி அவரை மைதானத்திற்கு அனுப்பினார்.

கேப்டனின் செய்தியை வழங்குவதில் இஷான் தாமதிக்கவில்லை. அடுத்த ஓவரிலேயே கையில் தண்ணீர் பாட்டிலுடன் ஓடிச் சென்று நேராக புஜாராவிடம் சென்றார். விக்கெட் தொடர்ந்து சரிந்து வருவதால் அதிரடி ஆக ஆட வேண்டும் என்று ரோஹித் ஷார்மா கூறியததை இஷான் புஜரவிடம் கூறினார். இதே செய்தியை அக்சர் படேலிடமும் தெரிவித்தார். இதையடுத்து புஜாரா சிக்ஸர் அடித்தார். இந்த காட்சியை பார்த்த கேப்டன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால், புஜாரா நீண்ட நேரம் களத்தில் இருக்க முடியாமல் 57வது ஓவரில் எதிர்பாராத விதமாக ஸ்மித்தின் அற்புதமான கேட்சல் ஆட்டமிழந்தார். அவர் 142 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள்-1 சிக்சர் அடங்கும். இதையடுத்து உமேஷ் யாதவும் டக் அவுட் ஆனார். என்றாலும் கடைசி வரை அக்சர் படேல் களத்தில் இருந்தார். அவர் 39 பந்துகளில் 1 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது:

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் வெளியேறினார். 7 பந்துகளில் விளையாடிய அவரால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இத்ததுடன் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

--Advertisement--