பாடகி எஸ்.ஜானகி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..!

சினிமா பின்னணிப் பாடகி எஸ் ஜானகி, தனது தேன்மதுரக் குரலால் ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்தவர். அவரைப் பற்றிய 10 உண்மைகளை நாம் தெரிந்து கொள்வோம்.

பாடகி எஸ் ஜானகி

ஆந்திரா மாநிலம் குண்டூரை அடுத்துள்ள பள்ளப்பட்லா என்ற கிராமத்தில், 1938 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் தேதி ராமமூர்த்தி – சத்யவதி தம்பதிக்கு பிறந்தவர் எஸ் ஜானகி.

இவர் சின்ன வயதில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறார். பெற்றோர் பலமுறை கண்டித்தும், அவருக்கு படிப்பு வரவில்லை. அதனால் வெறுத்துப் போன பெற்றோர், உன் தலைகளுக்கு எப்படியோ அதை நீயே தீர்மானித்துக் கொள், என்று அவரை விட்டுவிட்டனர்.

ஏழு மாதங்களில் சங்கீதம் கற்றவர்

ஒரு கட்டத்தில், ஜானகிக்கு இசையில் அதிக ஆர்வம் இருப்பதை புரிந்துக்கொண்ட அவரது தந்தை ராமமூர்த்தி, பைடி சாமி என்ற இசைமேதையிடம், அவரை சங்கீதம் கற்று அனுப்பி வைத்தார்.

ஏழே மாதங்களில் சங்கீதம் கற்றுக் கொண்ட அவரைப் பார்த்து மகிழ்ந்து போன, பைடி சாமி நீயே சங்கீதம்தான். நீ இசை கற்றது போதும் என்று பாராட்டி வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அகில இந்திய வானொலி நடத்திய பாட்டு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார் எஸ் ஜானகி. அதன்பிறகு அவரது தாய் மாமா சந்திரசேகர் கூறிய அறிவுரைப்படி, 20 வயதில் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார் எஸ் ஜானகி.

கோரஸ் பாடும் குழுவில்…

முதலில் ஏவிஎம் ஸ்டுடியோவில், கோரஸ் பாடும் குழுவில் ஒருவராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார். அப்போது 1957 ஆம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண்ணாசை பாழானது ஏனோ என்ற பாடல் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கினார் எஸ் ஜானகி.

6 மொழிகளில் 100 பாடல்கள்

அதன் பிறகு, அதே ஆண்டில் ஆறு மொழிகளில் 100 பாடல்களை பாடினார் எஸ் ஜானகி. அதைத் தொடர்ந்து சிங்கார வேலனே தேவா, சின்னத்தாயவள், ஊருசனம் தூங்கிருச்சு, புத்தம் புது காலை என தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.

இதையும் படியுங்கள்: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!

ஒரு நாளில் 15 பாடல்கள்

1980 களில், ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடும் அளவுக்கு மிகப்பெரிய முன்னணி பாடகியாக இருந்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பாடினார். இந்தியில் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியவர் என்ற பெரிய பெருமைக்குரியவர் எஸ். ஜானகி.

கிருஷ்ணரின் தீவிர பக்தை. ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவர். நகைகளை அணியும் பழக்கம் இல்லாதவர். ஆஸ்துமா பிரச்சனையால் மூச்சிரைப்பு சிரமங்கள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் பாடல்களை உரிய நேரத்தில் பாடி முடித்து விடுவார்.

உதடு மட்டுமே அசையும்

எத்தகைய பாடல்களாக இருந்தாலும், உடலில் எந்த அசைவம் காட்டாமல் உதட்டை மட்டுமே அசைத்து பாடக்கூடிய ஒரு சிறந்த பாடகியாக இருப்பவர். குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்ப்பார். ஆனால் குரல் இனிமைக்காக, வளத்துக்காக எந்த பயிற்சிகளையும் அவர் எடுத்துக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1959 ஆம் ஆண்டில் ராம் பிரசாத் என்பவரை எஸ் ஜானகி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முரளி கிருஷ்ணா என்ற மகன் ஒருவர் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம்.. விஷால் சொன்னதை கேட்டீங்களா..?

சின்ன சின்ன ஆசை பாடலுக்கு…

கடந்த 1992 ஆம் ஆண்டில் இவருக்கு தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகி என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது. ஆனால் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஜானகி, இந்த தேசிய விருது ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலை பாடிய மின்மினிக்கு கிடைத்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டு இருப்பேன் என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார்.

அதேபோல் காலம் தாழ்த்தி 2017 ஆம் ஆண்டில் தனக்கு கொடுக்கப்பட்ட பத்மபூஷன் விருதை வாங்க மறுத்தார் எஸ் ஜானகி என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ் ஜானகியின் ஆரம்பகால வாழ்க்கையில், இசைத்துறையில் அவர் இளையராஜாவின் முக்கியமான பாடகியாக இருந்து மிகச்சிறந்த பாடல்களை பாடியவர். அதேபோல் பாடகி மட்டுமின்றி, சிறந்த நடன கலைஞர் ஜானகி என்பதும் பலர் அறியாத உண்மை.

48 ஆயிரம் பாடல்களை பாடியவர்

இதுவரை 60 ஆண்டுகளில் 17 மொழிகளில், மொத்தம் 48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இதுவரை 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகள் பெற்ற கலை மாமணி இவர் என்பது பலரும் அறியாத முக்கிய உண்மைகளாக இருக்கின்றன.