வாவ்.. எம்புட்டு அழகு..! – வீட்டுல சுத்தி போட சொல்லுங்க..! – லைக்குகளை குவிக்கும் சாக்‌ஷி அகர்வால்..!

சாக்‌ஷி அகர்வால் (Sakshi Agarwal)நன்கு அறிமுகமான நடிகை. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர். இந்நிகழ்ச்சியின் வாயிலாக, மக்கள் மத்தியில் இவர் நல்ல அறிமுகம் கிடைத்தது. பெங்களூருவில் மாடலிங் துறையில் இருந்த சாக்ஷி, தமிழ் படங்களில் நடிக்க வரும் முன்பே, இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பன்னாட்டு வணிக நிறுவனத்தில் ஆலோசகராக, பணிசெய்திருக்கிறார். டிவி விளம்பரங்களிலும் நிறைய சாக்ஷி நடித்திருக்கிறார்.

Sakshi Agarwal,

இவரது தந்தை ராஜஸ்தானை சேர்ந்தவர், அம்மா பஞ்சாபியை சேர்ந்தவர். சாக்ஷி பிறந்தது உத்தரகாண்டில். அண்ணா பல்கலை.,யில் தகவல் தொழில் நுட்பம், இளங்கலை பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர் சாக்ஷி அகர்வால். ஆமாம், இவர் நடிப்பில் மட்டுமல்ல, படிப்பிலும் புலியாக தான் இருந்திருக்கிறார்.மேலும், சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் எம்பிஏ படித்தவர்.

Sakshi Agarwal,

கடந்த 2011ம் ஆண்டில் இவருக்கு, சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான சில ஆண்டுகளிலேயே சாக்ஷி, தனது கணவரை பிரிந்து விட்டார்.சாக்ஷி, 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் பணி செய்திருக்கிறார். அதில், பல விளம்பரங்களில் இவரே மாடலிங் ஆக நடித்திருக்கிறார்.சாக்ஷி ஒரு திறமையான பயிற்சி பெற்ற நடனக்கலைஞர். அதனால்தான், இவர் நடித்த படங்களில் நடனக் காட்சிகளில் மிக சிறப்பாக ஆடி இருக்கிறார்.ஹிப் ஆப், ஜூம்பா, பாலிவுட், பிலிம்பேர், ஏசியாநெட் விருதுகள், அம்மா விருதுகள் நிகழ்ச்சிகளில் இவர் தோன்றி நடனமாடி இருக்கிறார். விழா நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களுக்கு நடன விருந்து படைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Sakshi Agarwal,

சாக்ஷி அகர்வால், தமிழ் படங்களில் ராஜா ராணி, போகன், ஆதித்யன், காலா விசுவாசம், சிண்ட்ரொல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.சாக்ஷி அகர்வால், அழகானவர். நடனக் கலைஞர். திறமையான நடிப்பாற்றலை கொண்டவர். நிர்வாக திறன் மிக்கவர். மாடலிங் துறையில், விளம்பரங்களில் அதிக அனுபவம் கொண்டவர்.

குறிப்பாக நல்ல கல்வியாளர் என பன்முக அடையாளங்கள் அவருக்கு இருக்கிறது. எனினும், திரைப்பட நடிகை என்ற அடையாளமே அவருக்கு அதிக வருமானத்தையும், செல்வாக்கையும் தேடித்தரும் முக்கிய துறையாக உள்ளது. எனவே, திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

--Advertisement--

Sakshi Agarwal,

அதில் ஒரு பகுதியாக, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து, தனது கிளாமர் படங்களை அப்டேட் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன், கழுத்தில் ஊஞ்சல் போன்று கட்டி, வித்யாசமான ஒரு டிரஸ்சில், அது டிரஸ் என்ற வடிவத்தில் தான் இருந்ததாக கூற முடியாது. அப்படி ஒரு வித்யாசமான ஆடை அலங்காரத்தில் சாக்ஷி காட்சியளித்தார்.

பேஷன் டிவியில் வரும் மாடல் பெண்களுக்கு சவால்விடும் வகையில், இவரது பேஷன் அதகளமாக இருக்கிறதே என ஆச்சரியப்பட்டு போயினர். சிலர் படத்தை பார்த்தவுடன், என்ன கண்றாவி இது, என திட்டும் அளவுக்கு, அந்த டிரஸ் இருந்தது.

Sakshi Agarwal,

ஆனால், அதற்கு நேர்மாறாக இன்று அசத்தலான புடவையில் அமர்க்களமாக காட்சி தந்திருக்கிறார் சாக்ஷி. அப்படியும் டிரஸ் பண்றாங்க, இப்படியும் டிரஸ் பண்றாங்க, என்ன இது என பலரும் ஆச்சரியப்பட்டு போகின்றனர். அதிரடியாக டிரஸ் விஷயத்துல ரொம்பவும் கீழே இறங்கி போயிடாதீங்க, ரொம்ப ஆபத்தாகி விடும் என ரசிகர்களில் பலர் அவருக்கு கமெண்ட்டில் அட்வைஸ் செய்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.