பாரம்பரிய சீயக்காய் தூள் வீட்டிலேயே செய்வது எப்படி? – பார்க்கலாமா…!!

கார் கூந்தல் மேனிக்கு தேவையான போஷாக்குகளை அனைத்தும் தரக்கூடிய சக்தி சீயக்காய் உள்ளது.இந்த சீயக்காய் ஆரம்ப காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் கூந்தல் வளர்ச்சிக்கும் முடி உதிர்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தி வந்தார்கள்.

 கூந்தல் பிரச்சனைகளால் முடி உதிர்தல், இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற அனைத்து சம்பந்தமான பிரச்சனைகளையும் இந்த சீயக்காய் கொண்டு நீங்கள்  வாரம் இரு முறை தலைக்கு குளிக்கும் போது உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக  மாறிவிடும்.

 அப்படிப்பட்ட எந்த பாரம்பரிய சீயக்காயை நீங்கள் உங்கள் வீட்டிலேயே ஒரு இயற்கை சீயக்காய் தூளை செய்ய என்னென்ன பொருட்கள் தேவை அதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

 பாரம்பரிய சீயக்காய் தூள் செய்ய தேவையான பொருட்கள்

 1.சீயக்காய் அரை கிலோ

2.பூலாங்கிழங்கு 50 கிராம்

--Advertisement--

3.பச்சைப்பயிறு 100 கிராம்

4.கரிசலாங்கண்ணி 100 கிராம்

5.வெந்தயம் 50 கிராம்

6.பூந்திக்கொட்டை 100 கிராம்

7.ஆவாரம்பூ 50 கிராம்

8.செம்பருத்தி 50 கிராம்

9.ஆரஞ்சு பழத்தோல் 10 கிராம்

10.எலுமிச்சை தோல் பத்து கிராம்

11.கருவேப்பிலை 50 கிராம்

 மேற்கூறியுள்ள எந்த 11 பொருட்களையும் நீங்கள் வெயிலில் நன்கு காய வைத்து பிறகு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் உங்களுக்கு கிடைக்கும்.

 நீங்கள் குளிப்பதற்கு முன்பு உங்கள் தலையில் சிறிதளவு எண்ணெய் அதாவது நல்லெண்ணையை நன்கு தேய்த்து விட்டு பத்து நிமிடங்கள் கழித்து இந்த சீகைக்காயை நீரிலோ அல்லது கற்றாழை ஜெல்லிகிலோ கரைத்து 15 நிமிடங்கள் ஊற விட்டு ஷாம்பு போல உங்கள் தலையில் சேர்த்து நன்கு குளித்து விடவும்.

 இயற்கையான வாசனையை கூந்தலுக்கு தருவதோடு கூந்தலில் ஏற்படக்கூடிய பலவித பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஆற்றல் படைத்த இந்த சீகக்காய் பொடியை நீங்கள் குளித்து வருவதன் மூலம் தலைமுடி மென்மையாக மாறி முடியும் அடர்த்தியாக மாறிவிடும்.

எனவே இனி நீங்கள் இதை உங்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்துவதன் மூலம் கலப்படம் இல்லாத சீயக்காய் நீங்கள் பயன்படுத்த முடியும்.