தோள் சீலை போராட்டத்தின் 200 வது ஆண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு !

தோள் சீலை போராட்டத்தின் 200 வது ஆண்டு விழா

தமிழ்நாட்டின் வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக தோள்சீலை போராட்டம் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 200-ஆவது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டியே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன எனவும் முதலமைச்சர் அதில் கூறியுள்ளார்.

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களைத் தொட்டுவிட்டது.  50 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்தோமா என்றால் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோமா என்றால் இல்லை. ஒருகாலத்தில் அனைத்து உணவு விடுதிகளுக்கும் அனைவரும் போக முடியாது; பஞ்சமர்களும் குஷ்டரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டியிருப்பார்கள். நாடகக் கொட்டகைக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

ரயில் நிலையங்களில் உயர் சாதியினர் சாப்பிட தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனி பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையெல்லாம் தாண்டி தான் நாம் இந்த இடத்திற்கு வந்திறற்க்கிறோம்.

தோள் சீலை போராட்டத்தின் வரலாறு

மேலும் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். 80 வயது கடந்திருக்கக்கூடிய பெரியவர்களைக் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்குத்தான் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச் சமுதாயம் கடந்திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம், இப்படி  உயர்ந்திருக்கிறோம் என்று.

கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்தக் குடி தமிழ்.  தமிழ்ச் சமுதாயமானது ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

--Advertisement--

நேற்றைய தினம் கீழடியில் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் தலைச் சிறந்த நகர நாகரிகமாக வைகைக்கரை நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டான இடம் கீழடி” என்று கூறியுள்ளார்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. அதனை எதிர்த்து போராட்டம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. பெண்கள் தங்கள் மேலாடை அணியும் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்கள். மார்ச்,6 ஆம் தேதியுடன்  தோள் சீலைப் போரட்டம் நடந்தது 200 ஆண்டுகளாகின்றன. பெண்கள் தம் மார்பகங்களை மறைப்பதற்கு கூட போராட வேண்டிய சூழல் அன்றைய காலங்களில் ஏற்பாட்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்டசமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களாக ஆதிக்க வர்க்கதினர் இருந்திருக்கின்றனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிக்கப்படாத இந்தியாவின் தென் பகுதியான கேரளம் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகியவைகளை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் தொடங்கிய போராட்டம் இது.

இங்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனையோர் தீண்டத்தகாதோராக கருதப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். பெண்களின் நிலையோ மிகவும் மோசம். உயர்சாதி பெண்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. ஏனையோர் மார்பகத்தை மறைக்கும்படி ஆடை அணியக் கூடாது.அப்படி செய்தால், முலைவரி கட்ட வேண்டும். இதை எதிர்த்து 1822-1823, 1827-1829, 1858-1859 என் மூன்று கட்டங்களாக தோள் சீலைப் போராட்டம் நடைபெற்றது.

மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.