வெற்றியின் ரகசியத்தை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்..!!

வெற்றியின் ரகசியத்தை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்:இந்தூரில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் கண்ணை கட்டி காற்றில் விட்ட நிலை போல் காணப்பட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில், சேதேஷ்வர் புஜாராவைத் தவிர, எந்த பேட்ஸ்மேனும் கிரீஸில் நிலைக்க முடியவில்லை.

 

அபார வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு பெரிய அறிக்கையை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வெற்றியின் ரகசியத்தையும் கூறியுள்ளார்.

இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

இந்தூரில் நடந்த பெரிய வெற்றியைப் பற்றி ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், “முதல் நாளில் டாஸ் இழந்த பிறகு முதலில் பந்துவீச வேண்டியிருந்தது, எங்கள் பந்துவீச்சாளர்கள் சரியான பகுதிகளில் பந்துவீசி இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்.” குஹ்ன்மேன் முதல் நாள் மிகவும் அருமையாக பந்து வீசினார். எங்களின் அனைத்து பந்துவீச்சாளர்களும் மிக அற்புதமாக பந்துவீசினார்கள், உஸ்மான் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டார், இந்தத் தொடரில் அவர் எங்களுக்கு மிக பெரிய பக்க பலமாக செயல்பட்டார்.

பந்து வீச்சாளர்களை புகழ்ந்து தள்ளிய ஸ்மித்:

இந்தூர் டெஸ்டின் இரண்டாவது நாளில், முதல் இடைவேளையில் ஆஸ்திரேலியவை 11 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கு ஸ்மித் கூறுகையில், இந்தியாவின் இந்த பதிலடியை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

--Advertisement--

எனவே நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைத்தேன், புஜாரா ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார்,பிறகு நாதன் மிகவும் அற்புதமாக பந்து வீசி பின் வரிசை வீரர்களின் விக்கெட்களை எடுத்தார். நாதன் 8 விக்கெட்டுகளுடன் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்,நாங்கள் மிகவும் நன்றாக பந்து வீசினோம் என்று நான் நினைக்கிறேன்.இறுதியில் வெற்றியும் பெற்றோம் என்று பெருமிதமாக கூறினார்.