Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை அமலா பாலை தடை செய்ய வேண்டும்..! – வலுக்கும் எதிர்ப்பு..! – பரபரக்கும் கோலிவுட்..!
பிரபல நடிகை அமலாபால் முதல் வகுப்பு விமானத்தில் பயணித்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் நடிகர்கள் விமானத்தில் செல்லும் பொழுது முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து பயணிப்பது வழக்கம்.
ஒரு வீடு போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய அந்த இருக்கை இருக்கையில் இவர்களுக்கு தேவையான அனைத்துமே கிடைக்கும் ஆனால் நடிகை அமலா பால் மதுவை வாங்கிக் கொண்டு சுவைத்தபடியே விமானத்தில் பறக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
நீங்கள் மது அருந்துவதை யாரும் தவறு என்று சொல்லவில்லை ஆனால் அதனை ப்ரோமோன் செய்யும் விதமாக பெண்களும் மது அருந்தலாம் என்று நீங்கள் புரோமோட் செய்யும் செய்வது மூலமாக இந்த புகைப்படங்களை பார்க்கக்கூடிய பெண்களின் மனதில் இப்படியான ஒரு ஆசையை தூண்டுகிறீர்கள்.
இதன் விளைவாக பள்ளி மாணவிகள் ஆரம்பித்து கல்லூரி மாணவர்கள் வரை இப்படியான பழக்கத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள் இப்படியான நடிகைகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் இவர்கள் நடிக்கக்கூடிய படங்களை தடை செய்ய வேண்டும் என்று ஆக்ரோஷமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை அமலாபால் இந்த விமர்சனங்களை கண்ட பிறகு இந்த புகைப்படங்களை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்டும் பொழுது அந்த விஷயங்கள் திரும்ப பெறப்படும் என்பதை ரசிகர்கள் இந்த செயல் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
