ps1
Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிரட்டும் இசையில் பொன்னியின் செல்வன்.

--- Advertisement ---

ps1

 மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு வரும் பொன்னியின் செல்வன் பின்னணி இசையில் ஏஆர் ரகுமான் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக மக்களின் பார்வைக்கு  வர இருக்கிறது இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே  தங்களது நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

லைக்காவுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இப்படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இது பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன்  வசனம் எழுதியுள்ளார்.

actorsவருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பாகம் வெளிவரும் என தெரிகிறது முதலில் இதனை ஒடிடி யில் தான் வெளியிடுவார்கள் என்ற ஒருவித கருத்து நிலவி வந்த போதிலும் தற்போது  இது  திரையரங்கில் தான் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தீவிரமாக இருப்பதாகவும்,படத்தின் ஒரு காட்சிக்கு டிரம்ஸ் இசை அமைக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

music

இதனை பார்க்கும் போது பின்னணி இசையில் ஏஆர் ரகுமான் மிரட்டியிருப்பார். எனவே பொன்னியின் செல்வன் வேறொரு லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஜாம்பவான்களும் இந்தப்படத்தில் இருப்பதால் ரசிகர்களின் கனவு நிச்சயம் நிறைவேறும்.

மிகவும் பிரமாண்ட முறையில்  பல கோடிகளை கொட்டி உருவாக்கக்கூடிய இந்த வரலாற்றுக் காவியம் உலகம் இருக்கும் வரை பெயர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக இந்தப் படம் வருங்கால தலைமுறைக்கு நமது வரலாற்றை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆவணபாடமாக விளங்கும்

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---