ஓட்டு போட வராமல் சமூக சேவகி ஜோதிகா செய்யும் வேலையை பாருங்க.. விளாசும் ரசிகர்கள்..!

வடநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டு மருமகளாக இங்கு குடி புகுந்தவர் தான் நடிகை ஜோதிகா. மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர்,

1999 ஆம் ஆண்டில் வெளிவந்த வாலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார்.

ஜோதிகா தமிழில் அறிமுகம்:

முகவரி, உயிரிலே கலந்து, குஷி, பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில்,

நடித்து இங்கு முன்னணி நடிகையாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவுடன் நட்பாக பழகி பின் நாளில் அது காதலாக உருமாறியது.

இவர்கள் இருவரும் சேர்ந்து காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது உண்மையிலே அந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகளில் காதலை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

--Advertisement--

அதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர். இது தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் என இருவர் இருக்கிறார்கள்.

சூர்யா சம்மதத்துடன் ரீ என்ட்ரி:

குழந்தை பிறப்பிற்கு பிறகு ஜோதிகா சினிமாவில் நடிப்பதில் இருந்தே விலகி இருந்தார். பல வருடங்கள் கழித்து சினிமாவில் வரவேண்டும் என தனது விருப்பத்தை கணவர் சூர்யாவிடம் கூற,

அவரோ அதற்கு சம்மதித்தார். பின்னர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

காற்றின் மொழி, நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.இதனிடையே திடீரென தனது கணவர் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மும்பைக்கு தனி கொடுத்தனம் சென்றுவிட்டார்.

சொந்த ஊர் ஆன மும்பையில் தற்போது ஜோதிகா செட்டில் ஆகிவிட்டார். இதுவே மிகப்பெரிய அளவில் தமிழக மக்களால் விமர்சிக்கப்பட்டது.

ஜோதிகா மாமனார் சிவக்குமாரின் பேச்சை மீறி தனது கணவரை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டதாகவும்,

மும்பையில் தனிக்குடித்தனம்:

சிவகுமார் குடும்பத்தில் இதனால் பிளவுகள் ஏற்பட்டு குடும்பம் தனித்தனியே பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

மும்பைக்கு சென்று அங்கு ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை தொடர்ந்து ஜோதிகா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்தார் .

மும்பைக்கு சென்ற பின்னர் ஜோதிக்கா டோட்டலாகவே மாறிவிட்டார் என்பதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஆம் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு சினிமா நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாக்களித்தார்கள்.

அதில் சூர்யா அவரது தம்பி மற்றும் அப்பா சிவக்குமார் என குடும்பமாக வந்து வாக்களித்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக ஜோதிகா எங்கே போனார்?

ஜோதிகா மட்டும் ஏன் வரவில்லை ?என ரசிகர்கள் கேள்விகளை முன்வைத்து வந்தனர். அவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதால் தான் இந்த தமிழ்நாட்டு பக்கமே வரவில்லையா என கேள்வி எழுப்பிய நிலையில்,

ஜோதிகா தற்போது நேபாளத்திற்கு தனது தோழியுடன் தனியாக ட்ரிப் சென்று அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஓட்டு போட வராமல் ஊர் சுற்றும் ஜோதிகா:

இமயமலைக்கு ட்ரிப் சென்றிருப்பதால் தான் அவர் வாக்களிக்க வரவில்லையா? என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

விருது விழாக்களிலும் பேட்டிகளிலும் சமூக சேவைகள் குறித்தும் சமூக அக்கறை சார்ந்த விஷயங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பக்கம் பக்கமாக பேசும் ஜோதிகா,

இப்படி ஜனநாயக கடமையை கூட செய்ய தவறிவிட்டாரே என பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள் சமீபத்தில் கூட அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கழிவறைகள் மிக மோசமாக இருப்பதாகவும்,

அரசு மருத்துவமனை கட்டிடங்கள் மிகவும் பாழடைந்தது போல் இருப்பதாகவும் தங்களால் முடிந்த உதவிகளை அதற்கு செய்தால் அதன் கட்டுமான பணியை புதுப்பிக்கலாம் என சமூக அக்கறையோடு பேசி,

மேடையில் கைத்தட்டல் வாங்கி இருந்தார். அப்படி இருக்கும் நடிகை ஜோதிகா இப்போது வாக்களிக்க கூட வரவில்லை.

இதுதான் அவரது உண்மையான முகம்… சமூக சேவகி ஜோதிகா செய்யும் வேலையை கொஞ்சம் பாருங்களேன் என நெட்டிசன்ஸ் இந்த வீடியோவை ஷேர் செய்து விமர்சித்து தள்ளியுள்ளனர்.