“வெயில் அதிகமா இருக்கா..!”- அப்ப வாடாம், வத்தல் போட யூஸ் பண்ணுங்கோ..!

இந்தக் கோடையில் வெயில் அதிகமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் சிறப்பாக பயன்படுத்தி வரும் நாட்களுக்கு தேவையான வத்தல் மற்றும் வடகத்தை உங்கள் வீட்டிலேயே எளிமையாக போட்டுக் கொள்வதின் மூலம் பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

 பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த வடாம் மற்றும் வத்தலை உங்கள் வீட்டில் உங்கள் மேற்பார்வையில் போடுவதால் ஆரோக்கியமான உணவாகவும் அதை உங்கள் வீட்டிலேயே பொரித்துக் கொடுப்பதால் எண்ணெய் பற்றிய கவலையும் உங்களுக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட பாவக்காய் வத்தல் மற்றும் தக்காளி ஜவ்வரிசி வடாம் எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

ஜவ்வரிசி வடாம்

ஜவ்வரிசி வடாம் செய்ய தேவையான பொருட்கள்

1.100 கிராம் ஜவ்வரிசி 2.இரண்டு தக்காளி

3.சிறிது சீரகம் 4.தேவையான உப்பு 5.இரண்டு மிளகு

6.இரண்டு வர மிளகாய்

--Advertisement--

செய்முறை

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் நீங்கள் முதல் நாள் காலையிலேயே ஊற வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் ஊறிய இந்த பொருளை எடுத்து நீங்கள் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து விடுங்கள்.

 அரைத்த இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு எண்ணெயில் விட்டு நன்கு கூழ் பதத்தில் வேகவைத்து கொள்ளவும்.

 இதனை அடுத்து கூழ் பதத்திற்கு வந்தவுடன் இதனை உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று ஒரு காட்டன் வேட்டியை விரித்து அதில் அப்படியே போட்டு பரத்தி விடுங்கள்.

 கொளுத்தும் வெயிலில் இவை காய்ந்து ஓரிரு நாட்களில் நீங்கள் உங்கள் வடாத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

 சுவையான தக்காளி ஜவ்வரிசி வடகம் பிள்ளைகள் விரும்பும் வடகமாக இருக்கும்.

பாகற்காய் வத்தல்

பாகற்காய் வத்தல் செய்ய தேவையான பொருட்கள்

1.பாகற்காய் 2 கிலோ

2.உப்பு தேவையான அளவு

சந்தையில் விற்கும் பாகற்காயை இரண்டு கிலோ அளவு வாங்கி வந்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இதை வட்ட வடிவத்தில் வெட்டி தேவையான அளவு உப்பை சேர்த்து குக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விடவும்.

 அதனை அடுத்து இதனை உங்கள் மொட்டை மாடியில் ஒரு காட்டன் துணியில் அப்படியே போட்டு உலர விடுங்கள். ஓரிரு நாட்களுக்குப் பிறகு உலர்ந்த எந்த பாகற்காய் வற்றலை ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் எப்போது தேவை என்றாலும் அதை எடுத்து பொறித்து சாப்பிடலாம்.

 மேற்குரிய இந்த இரண்டு வடகங்களையும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். கட்டாயம் பண சேமிப்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் சுவையாகவும் நீங்கள் உண்டு மகிழலாம்.