” வித்தியாசமான வரகரிசி தயிர் சாதம்..!” – சம்மருக்கு ஏற்ற ஹெல்தியான ரெசிபி..!

 உடலுக்கு தேவையான கால்சிய சத்தை கொடுப்பதில் தயிர் சாதத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மேலும் இந்த தயிர் சாதத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியை பயன்படுத்தி செய்வதை விட சிறுதானியங்களில் அதிக அளவு சக்தியை கொடுக்கக்கூடிய வரகரிசியில் தயிர் சாதத்தை செய்து சாப்பிடும் போது இதன் சுவை அலாதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சம்மருக்கு ஏற்ற ஒரு ஹெல்த்தியான ரெசிபியாகவும் விளங்கும்.

அப்படிப்பட்ட டேஸ்டான வரகரிசி தயிர் சாதத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

 வரகரிசி தயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

1.வரகரிசி 200 கிராம்

2.தயிர் 200 கிராம்

தாளிக்க

3.கடுகு அரை டீஸ்பூன் 4.உளுந்து அரை டீஸ்பூன் 5.மோர் மிளகாய் 4

--Advertisement--

6.காய்ந்த மிளகாய் ஒன்று 7.பச்சை மிளகாய் ஒன்று 8.பெருங்காயத்தூள்

  1. ஐந்து முந்திரிப் பருப்பு 10.50 கிராம் அளவு 11.திராட்சைப்பழம் அல்லது உலர் திராட்சை

12.50 கிராம் மாதுளை 13.கருவேப்பிலை சிறிதளவு

14.கொத்தமல்லி இலை சிறிதளவு

15.இஞ்சி ஒரு துண்டு நறுக்கியது

16.சீரகம் அரை டீஸ்பூன் 17.உப்பு தேவையான அளவு

 செய்முறை

முதலில் 200 கிராம் வரகு அரிசியை நன்கு கழிந்து விட்டு குக்கரில் போட்டு இரண்டு முதல் மூன்று விசில் வீட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 இதனை அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான உடன் அதில் தாளிக்க தேவையான பொருட்களான கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு வெடிக்க விடவும்.

 இது வெடித்து வந்தவுடன் வர மிளகாய் பச்சை மிளகாய் மோர் மிளகாய் இவற்றை போட வேண்டும். இதனை அடுத்து நீங்கள் உலர் திராட்சையை வைத்திருந்தால் அந்த திராட்சையும் போட்டு விடுங்கள்.

 இதனை நன்றாக கிளறி விடவும். பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தயிரை அதோடு ஊற்றி விடுங்கள். தயிறு கட்டியாக இருக்கும் பட்சத்தில் சிறிதளவு நீரை ஊற்றுங்கள். இப்போது இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் சீரகத்தை சேர்த்து விடுங்கள்.

 இந்தக் கலவையை நன்றாக கிளறி விடுங்கள் ou.முன்பே வேக வைத்திருக்கும் வரகு அரிசியை எடுத்து உதிர் உதிராக இதில் போட்டு விடுங்கள். நன்கு கிளறி தேவை என்றால் நீர் மற்றும் உப்பினை சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக கறிவேப்பிலை, இஞ்சி கொத்தமல்லி இலை மாதுளை இவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும்.

 இப்போது சுவையான வரகரிசி தயிர் சாதம் தயாராகிவிட்டது வருகின்ற கோடைக்கு ஏற்ற உணவாக இருப்பதால் உங்கள் வீட்டில் செய்து அனைவரும் சுவைத்து மகிழுங்கள்.