“விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோசம்..” சூழ்நிலை வந்தால் அவருடன் நிற்பேன்.. பிரபல இயக்குனர் ஒரே போடு..!

“விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோசம்..” சூழ்நிலை வந்தால் அவருடன் நிற்பேன்.. பிரபல இயக்குனர் ஒரே போடு..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நிலையில் இருப்பவர் நடிகர் விஜய். கடந்த 2ம் தேதி, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி இருக்கிறார்.

நடிகர் விஜயின் அரசியல் வருகை அறிவிப்பு, தமிழகத்தில் பலருக்கும் ஆச்சரியமே தந்தது. அதற்கு காரணம் அவர் நடித்த படங்களில் அரசியல் வருகை குறித்த எந்த பஞ்ச் டயலாக்கும் பேசவில்லை.

விஜய்

லியோ படத்தில் கூட அதுபற்றிய எந்தவிதமான சிக்னலும் விஜய் காட்டவில்லை. ஆனால் திடீரென அரசியல் கட்சி பெயரையே விஜய் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

--Advertisement--

சட்டசபை தேர்தல்…

எங்கள் இலக்கு வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் என்றும் தெளிவாக முதல் அறிக்கையிலேயே கூறிவிட்டார்.

விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து, சக நடிகர்கள், நடிகையர் மற்றும் அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்து அவருக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டுமே, வெளிப்படையாக தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் அவர்களில் பலரும் திமுக, அதிமுக ஆதரவு சார்ந்தவர்களாக இதுவரை இருந்தவர்கள். இப்போதும் இருப்பவர்கள். அதனல் விஜய்க்கு நேரடியாக தங்களது அபிப்ராயத்தை வெளிப்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.

சமுத்திரக்கனி

ஆனால் பிரபல இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி விஜய் அரசியல் வருகை குறித்து மிக வெளிப்படையாக தன் கருத்தை பொதுவெளியில் பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில், தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சுவாமி தரிசனம் செய்ய வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது பேசிய சமுத்திரக்கனி, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோஷம். மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தில் அவர் நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்தது சந்தோஷமான விஷயம்தான் என்றார்.

விஜயுடன் நிற்பேன்

நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்தால், பிரசாரத்துக்கு போவீர்களா என்று கேள்வி எழுந்த போது, மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் கண்டிப்பாக நான் விஜயுடன் கூட நிற்பேன்.

அவர் அழைத்துதான் நான் போக வேண்டும் என்று நினைக்கிற கேரக்டர் இல்லை நான். மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்தால், நானே போவேன், என்றும் கூறியிருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோசம், சூழ்நிலை வந்தால் அவருடன் நிற்பேன் என்று பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி ஒரே போடு போட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.