கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை மனிஷா யாதவ்..!


‘ஆதலால் காதல் செய்வீர்,’ ‘ஜன்னல் ஓரம்,’ என வரிசையாக திறமையான நடிப்பின் மூலம் முத்திரை பதித்த இவர், சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஒரு குப்பை கதை’ படத்தின் மூலம் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை அள்ளினார். 

நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல், தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகளை இவர் நிறைவு செய்து இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் ஒரு பாடலில் மட்டும் கவர்ச்சி ஆட்டம் போட்டு விட்டு சென்றார் அம்மணி. ஆனால், படம் வெளியான பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு மீது குற்றச்சாட்டை வைத்தார். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று தான் என்னை நடிக்க வைத்தார். 

ஆனால், படத்தில் என்னை ஒரு ஐட்டம் டான்சர் ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறார். இனி, இது போன்ற தவறுகளை நான் செய்யவே மாட்டேன் என்று பொழந்து கட்டினார்.

அடிக்கடி தனது கணவருடன் ட்ரிப் அடிக்கும் வழக்கம் உடைய இவர் செல்லும் இடங்களில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.

அந்த வகையில்,சமீபத்தில், விடுமுறை நாட்களை கொண்டாடிய மனிஷா நீச்சல் குளத்தில் குழந்தை தனமாக ஆட்டம் போட்டு மகிழ்ந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,