ரஜினிக்கு உருவாக்கிய கதையை முன்னணி ஹிந்தி நடிகரிடம் சொல்லி ஓ.கே வாங்கிய இயக்குனர் அட்லி..!


நடிகர் விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகின தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து தற்போது பிகில் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. 

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

 இந்தநிலையில், இந்த படத்தில் ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் சில நிமிடம் மட்டுமே தோன்றும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், தற்போது இயக்கி வரும் "பிகில்" படத்தை அடுத்து ஷாரூக்கானை வைத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரு படத்தை அட்லீ இயக்கப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.