ஜாங்கிரி மதுமிதாவை வீட்டை விட்டு வெளியேற்ற அபிராமி கேங் போட்ட திட்டம் - ரணகளம் ஆகும் பிக்பாஸ்


பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரை இன்றே வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்றும் அதனை வீட்டில் உள்ள போட்டியாளர்களே முடிவு செய்யலாம் என்றும் பிக் பாஸ்கூறுகிறார். 

இந்நிலையில், அபிராமி கேங்கில் உள்ள அனைவரும் மதுமிதாவை வெளியேற்றலாம் என கூடி திட்டம் போடுகிறார்கள். திடீரென சாண்டியை அழைக்கும் பிக்பாஸ் இது போலியான டாஸ்க் என்றும் யாரையும் இன்று வெளியேற்றப்போவதில்லை என்றும் கூறுகிறார். 

ஆனால், சாண்டி இதனை யாருக்கும் சொல்லாமல் யாரை வெளியே அனுப்ப போகிறோம் என்று வீட்டில் உள்ளவர்களை முடிவு செய்யவைக்க வேண்டும். ப்ரோமோவில் வந்த காட்சிகள் அடிப்படையில் யார்.. யார் மீது வெறுப்பில் இருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த ஏற்பாடு என தெரிகின்றது. வழக்கம் போல இந்த வாரமும் மதுமிதா மீது தான் பலரும் வெறுப்பில் இருகிறார்கள் என்று தெரிகின்றது. இதனால், இன்றைய எபிசோடில் விறுவிறுப்பு கூடியுள்ளது.
Share it with your Friends