பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்தது.! - கதறி அழுத பாக் ரசிகர்கள் ..!


உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 43-வது போட்டியான இன்றைய லீக் போட்டியில் பாக்

வங்கதேசம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில், கிட்ட தட்ட 311 ரன்கள் வித்தியாசத்தில் பாக் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் அணி மொத்தமே 315 ரன்கள் தான் எடுத்துள்ளது. இந்நிலையில், வங்கதேச அணியை வெறும் 07 ரன்களுக்குள் ஆல்-வுட் ஆக்கினால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும். 

ஆனால், அதற்கு 100 சதவிதம் வாய்ப்பில்லை. இதனால் 2019 உலகக்கோப்பை கிரிகெட்டின் அரையிறுதி வாய்பை பெரும் கனவு தகர்ந்துள்ளது. இதனால்,
 பாக் ரசிகர்கள் மைதானத்திலேயே கதறி அழுதனர்.

ஒரு வேளை, இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தால் பாக் அணி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும். ஆனால், இந்திய அணி அந்த வாய்ப்பையும் பாக்-கிற்கு கொடுக்கவில்லை.
Share it with your Friends