தளபதி விஜயை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் ! என் கணவர் அடித்து மண்டையை உடைத்துவிட்டார்..! - பிரபல நடிகை ஓப்பன் டாக்..!


சீரியல் நடிகை "செந்தில்குமாரி" சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை எனஇரண்டிலும் நடித்து வருகிறார். மெர்சல் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில்,தன்னுடைய இளவயதில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.அவர் கூறியதாவது, " நான் திருமணம் ஆன பின்பு தான் சினிமாவில் நடிக்க வந்தேன். நான் விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்" என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் விஜய்யை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். திருப்பாச்சி படத்தில் என்னுடைய சகோதரி மீனல் சிறு வேடத்தில் நடித்தார்.

அதனால் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால் குஷியான நான், அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன். என் கணவர் தடுத்தார். அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என அவர் கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends