இதனால் தான் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் - நடிகை அமலாபால் குமுறல்..!


செக்கச் சிவந்த வானம் படத்துக்கு பிறகு கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வனை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். 

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் லால் இணைந்திருப்பதாக அவரே அறிவித்திருந்தார்.

இதனிடையே, இந்த படத்தில் நடிக்கவிருந்த நடிகை அமலாபால் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவல்வெளியானது. படக்குழுவும் அது உண்மை தான் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், நான் ஏன் படத்தில் இருந்து விலகினேன் என்று அமலா பாலே இப்போது கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, கதைப்படி, நான் ஒல்லியாக இருக்க வேண்டும். இதற்காக நான், இரவு-பகலாக `ஜிம்'முக்கு போய் உடற்பயிற்சி செய்து வருகிறேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கி விட்டதால் எனக்கு பதிலாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்து விட்டார்கள். இந்த படத்தில் இருந்து நான் விலகியதற்கு இதுதான் உண்மையான காரணம்'' என்று கூறியுள்ளார் அமலாபால்.

இதனால் தான் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் - நடிகை அமலாபால் குமுறல்..! இதனால் தான் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் - நடிகை அமலாபால் குமுறல்..! Reviewed by Tamizhakam on January 14, 2020 Rating: 5
Powered by Blogger.