நிர்வாண நிலையில் பிணமாக கண்டெடுக்ப்பட்ட பிரபல நடிகை - 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தினை வெளியிட்ட தோழி..!


கடந்த 2016-ம் சின்னத்திரை வட்டாரத்தை அதிர வைத்த ஒரு சம்பவம் தான் பிரபல தொகுப்பாளினி சபர்ணா ஆனந்தின் தற்கொலை. 

பிரபல சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் சின்னத்திரைக்கு சீரியல் நடிகையானார். இவரது மர்ம மரணம் குறித்து அவரது தோழி தகவல் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளார். 

பல சீரியல்களில் வில்லியாக வலம் வந்த இவர் சில தமிழ் படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவும் நடித்திருந்தார். கோவையை சேர்ந்த சபர்ணா ஆனந்த் சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கையை அறுத்துக்கொண்டு உயிரிழந்தார். அவரது உடல் ஆடை ஏதும் இன்றி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்தபடி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது. 

அதன் பின்பு உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வந்தது. ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று உறுதியாக வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து "நான்கு" ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது தோழியான சீரியல் நடிகை உஷா எலிசபெத், அவரது தற்கொலை குறித்து பேசியுள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட நாளுக்கு முன்னர் பல மாதங்களாக சபர்ணாவிற்கு நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை என தன்னிடம் அடிக்கடி கூறி வந்தார். இதனால், கடுமையான மன உளைச்சலிலும் இருந்துவந்தார். 

நானும் அவ்வப்போது அவறுக்கு ஆறுதல் கூறி வந்தேன். ஆனால், அவர் இவ்வாறான முடிவினை எடுத்துவிட்டார் என்று கூறியுள்ளார். தற்போது வரை நடிகை சபர்ணாவின் மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது தோழி கூறியிருக்கும் தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும் படியாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends