நைட் பார்ட்டியில் இது தான் நடந்தது - ஓப்பனாக கூடிய சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர்


கடந்த சில தினங்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷயம் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி விவாகரம் தான்.

நிச்சயம் செய்து விட்டு என்னை திருமணம்செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டார் தர்ஷன் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார் அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டி. 

இது குறித்து பதில் அளித்த தர்ஷன், நான் பிக்பாஸ் வீட்டிற்குள்இருக்கும் போது சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலனுடன் இரவு நேர பார்ட்டியில் சந்தித்து ஒன்றாக இருந்துள்ளார். இதனால் தான் அவர் மீது எனக்கு வெறுப்பு அதிகமாகி விட்டது என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.

இந்நிலையில், தற்போது சனம் ஷெட்டியின் முன்னாள் காதலன் அஜய் என்பவர் அண்மையில் இது குறித்து பேட்டி அளித்த போது "அந்த நைட் பார்ட்டியில் நானும் சனம் ஷெட்டியும் கலந்து கொண்டது உண்மை, பார்த்துக்கொண்டது உண்மை. ஆனால் நாங்கள் , ஒன்றாக இல்லை. ஏன் பேசிக்கொள்ள கூட இல்லை. இது தான் அங்கு நடந்தது" என்று தன்னுடைய விளக்கத்தை ஓப்பனாக கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends