இப்படி நடிக்கும் நிலை வந்தால் சினிமாவை விட்டே போய்விடுவேன் - அதிர்ச்சி கொடுக்கும் மீனா..!


கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோ, ஹீரோயின் வரை ஜொலித்தவர்கள் மிகச்சிலரே. கமல்ஹாசன், ஷாலினி உள்பட மிகச்சிலரே உள்ள இந்த பட்டியலில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் நடிகை மீனா. 

சிவாஜி கணேசன் நடித்த 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன நடிகை மீனா அதன்பின்னர் ரஜினியுடன் 'எங்கேயோ கேட்ட குரல்'. 'அன்புள்ள ரஜினிகாந்த்', உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 

இவர் 'ஒரு புதிய கதை' என்ற படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமானாலும், அவருக்கு முதன்முதலில் புகழ் வாங்கி கொடுத்த படம் ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசில' படம் தான்.அதன் பிறகு இவரது மார்கெட் ராக்கெட் வேகத்தில் பறந்தது. தமிழ், தெலுங்கு என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.


90களில் கவர்ச்சி அவதாரம் எடுத்து இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த மீனா அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்தார். 

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைத்து மீண்டும் நடிக்க வந்துள்ள அவர் இனிமேல் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பதிலாக சினிமாவை விட்டேஒதுங்கி விடுவேன் என அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

--Advertisement--
Share it with your Friends