ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த டிக் டாக் காதல் மன்னன் கைது - பரபரப்பு தகவல்..!


இந்த டிக்-டாக் செயலியை அறிவியல் மற்றும் உடல் நலன் சார்ந்த விஷயங்கள, சமையல் குறிப்புகள், கல்வி சார்ந்த விஷயங்களை உலகம் முழுக்க மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆனால், இந்தியாவில் ஜாதி சண்டை போடவும், பெண்களுடம் ரொமான்ஸ் டூயட் போடவும், இளம் பெண்கள் அரைகுறை ஆடையுடன் அங்கங்கள் தெரிய ஆட்டம் போடவும், அதிலும் சில ரோமியோக்கள் திடீர் பிரபலமாகி விட்டு இளம் பெண்களை மயக்கி தவறான விஷயங்களில் ஈடுபடவும் செய்து கொலை, தற்கொலை, விவாகரத்து என பட்டியல் நீள்கிறது. 

ஆனால், இந்த டிக்டாக் ஆப்பில் பிரபலமாகி சினிமா வாய்பை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5 கோடி பயனாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

இதனைத்தொடர்ந்து இந்த வகை மொபைல் ஆப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எனினும் அவற்றை தவறாக பயன்படுத்தி சைபர் கிரைம் பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

அந்த வகையில் டிக்டாக் ஆப்பில் ஆபாசமாக பதிவேற்றம் செய்த கல்லூரி மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கூலிபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன். இவருக்கு வயது 19 தான் ஆகின்றது.

தனியார் கல்லூரி மாணவரான இவர், சமீபகாலமாக டிக் டாக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி வந்தார். இந்நிலையில் அவர், ஆபாச படம் எடுத்து சிலரை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து சேர்ந்தமரம் எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் இன்று கண்ணனை அதிரடியாக கைது செய்தனர்.

ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த டிக் டாக் காதல் மன்னன் கைது - பரபரப்பு தகவல்..! ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த டிக் டாக் காதல் மன்னன் கைது - பரபரப்பு தகவல்..! Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.