"இதனால் தான் எஸ்கேப் ஆனேன்.." - தன்னுடைய முதல் காதல் குறித்து சமந்தாவே கூறிய தகவல் - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்து வசூல் குவித்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தார்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்துகொண்டால்மார்கெட் அவுட்டாகி விடும். ஆனால்,சமந்தாவிற்கு அப்படி நடக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த அனேக படங்கள் ஹிட் அடித்தன.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முன்னாள் காதலன் குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா, கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் உடன் இணைந்து "ஜபர்தஸ்த்" என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர், நடிகை சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் டேட்டிங் செய்ததாகவும் ஊடகங்களில் வைரலாக பேசப்பட்டன.

அதற்கும் ஒரு படி மேலே சென்று இருவருக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து விட்டது என்று கூட கூறினார்கள். சமந்தாவின் திருமணத்திற்கு பிறகு இந்த கிசுகிசுக்கள் எல்லாம் உண்மையில்லை என்று பேசினார்கள். ஆனால், தற்போது சமந்தாவே அது உண்மை தான் என கூறியுள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

சமீபத்தில், நடிகை சமந்தா அளித்த பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் குறித்து பேசினார். அவர் கூறுகையில், அந்த தவறான முடிவை தான் செய்திருக்கக் கூடாது. என்னுடைய நல்ல நேரமோ என்னமோ என்று தெரியவில்லை. நான் அதில் சிக்கிக் கொள்ளாமல், எஸ்கேப் ஆகி விட்டேன். இந்த விஷயத்தில் எஸ்கேப் ஆனதற்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் தான் என நினைக்கிறன். அதனை கடந்து வந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்றும் பேசி மீண்டும் குட்டையை கிளறியுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் ஓடிக்கொண்டிருகின்றன.

"இதனால் தான் எஸ்கேப் ஆனேன்.." - தன்னுடைய முதல் காதல் குறித்து சமந்தாவே கூறிய தகவல் - ரசிகர்கள் ஷாக்..! "இதனால் தான் எஸ்கேப் ஆனேன்.." - தன்னுடைய முதல் காதல் குறித்து சமந்தாவே கூறிய தகவல் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 31, 2020 Rating: 5
Powered by Blogger.