கோக்குமாக்கான கதையில் ஜோடி சேரும் ஷாந்தனு - அதுல்யா ரவி.!


இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் ஷாந்தனு ‛சக்கரகட்டி' படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 2010ல், மகனை வைத்து சித்து பிளஸ் 2 படத்தை இயக்கி, அதில் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார் பாக்யராஜ். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. 

அன்று முதல் இன்று வரை ஒரு நிலையான இடத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறார் ஷாந்தனு. தற்போது, மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் பாக்யராஜும், சாந்தனுவும் இணைந்து நடிக்கிறார்கள். அதுல்யா, சாந்தனு ஜோடியாக நடிக்கிறார். முதலிரவை மையமாக கொண்டு உருவாகும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. 

இந்த படம் குறித்து படத்தின் இயக்குனர் கூறுகையில், பல்வேறு கலாட்டா கல்யாண படங்களை பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கிறது இப்படம். 

புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறோம் என்றார்.

கோக்குமாக்கான கதையில் ஜோடி சேரும் ஷாந்தனு - அதுல்யா ரவி.! கோக்குமாக்கான கதையில் ஜோடி சேரும் ஷாந்தனு - அதுல்யா ரவி.! Reviewed by Tamizhakam on March 14, 2020 Rating: 5
Powered by Blogger.