"விஜய் இந்த விஷயத்துல மட்டும் அடங்கவே மாட்டேங்குறார்" - பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 

இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் 3 போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

Master Teaser :


இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் குறித்த கேள்வியை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டீசருக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

 

Dance Master Robert : 


நடிகர் விஜய்-யை பலரும் புகழ்ந்து பேசி நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் விஜய்யுடன் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் நடிகரும், நடன இயக்குனருமான ராபர்ட்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "விஜய் அண்ணன் லவ் டுடே காலத்தில் டான்ஸ் ஆடினார். ஆனால், எனர்ஜி குறையாமல் இப்போதும் அதை விட வெறித்தமனாக ஆடுகிறார். விஜய் அண்ணா டான்ஸ் விஷயத்துல மட்டும் கொஞ்சம் கூட அடங்க மாட்டேங்குறாரு" என்று  கூறியுள்ளார்.

"விஜய் இந்த விஷயத்துல மட்டும் அடங்கவே மாட்டேங்குறார்" - பிரபல நடிகர் ஓப்பன் டாக்..! "விஜய் இந்த விஷயத்துல மட்டும் அடங்கவே மாட்டேங்குறார்" - பிரபல நடிகர் ஓப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on March 05, 2020 Rating: 5
Powered by Blogger.