"அவர் வீட்டுல வெளிநாட்டு இளம் பெண்ணை வச்சிட்டு இருக்கார்" - முன்னணி நடிகர் மற்றும் மனைவியை வம்பிழுத்த ஸ்ரீ ரெட்டி..!


படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திர திரையுலகில் முன்னணி நடிகர்கள் மீது குற்றம்சாட்டிய ஸ்ரீரெட்டி அங்கு அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார். 

ஸ்ரீரெட்டியின் நடவடிக்கைகளால் அவருக்கு ஆந்திராவில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னைக்கு வந்து குடியேறிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். 

ஆனால் அக்குற்றச்சாட்டுகளை தமிழ்த் திரைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே தனது வாழ்க்கையை மையப்படுத்திய ரெட்டி டைரி என்ற கதையில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஸ்ரீரெட்டி. இவர் தலையிடாத சர்ச்சையான விஷயமே இல்லை. 

இவர் தலையிட்ட விஷயம் சர்ச்சையாகாமல் இருந்ததே இல்லை. இந்நிலையில், ஆரம்பம் முதலே நடிகர் பவன் கல்யாண் மீது வன்மத்தை உமிழ்ந்து வரும் இவர் இப்போது அவரது மனைவியையும் சேர்த்து வம்பிற்கு இழுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

நடிகர் பவன் கல்யாணுக்கு நடந்த முதல் மற்றும் இரண்டாவது திருமணம் விவாகத்தில் முடிந்தது.தற்போது, மூன்றாவதாக ரஷ்யாவை சேர்ந்த "அண்ணா லெஸ்நெவா" என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். 


இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய முகநூல் பதிவில் "பவன் கல்யாண் வீட்டில் வெளிநாட்டு இளம் பெண்னை வைத்துள்ளார். அவருக்கு கொரோனா வரவில்லையா..? என்று கேட்டுள்ளார். 

இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை விளாசி வருகிறார்கள். அவை எதுவும் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கொச்சை கொச்சையாக இருப்பதால் ஒரே ஒரு விளாசலை மட்டும் இங்கே SS கொடுத்துள்ளோம்.--Advertisement--
Share it with your Friends