நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் - இவர் தான் மாப்பிள்ளை..! - திடீரென வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான வேகத்தில் கிடுகிடுவென வளர்ந்து உச்சத்திற்கு வந்தார். தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

கடந்த, 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்கு கூட இவருக்கு தேசிய விருது கிடைத்தது. சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும், பா.ஜ.க வில் உள்ள பிரபல ஒரு தொழிலதிபர் ஒருவரது மகனை கீர்த்தி சுரேஷுக்கு வரனாக அவரது தந்தை சுரேஷ்குமார் பார்த்துள்ளதாக நடிகரும், பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 

சினிமாவில் இப்போது தான் பிஸியாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 

ஆனால், இந்த தகவல் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் வாயே திறக்காமல் மௌனமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் - இவர் தான் மாப்பிள்ளை..! - திடீரென வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக்..! நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் - இவர் தான் மாப்பிள்ளை..! - திடீரென வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.