சூர்யா பட இயக்குனருக்கு கொரோனா பாசிட்டிவ்..? - ரசிகர்கள் ஷாக்..!


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

மேலும் இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "ரத்த சரித்திரம்" என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக எனது டாக்டர் கூறியுள்ளார்" என பதிவிட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து ஒரு சில நிமிடங்களே "ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள், எனது டாக்டர் என்னை April Fool செய்து விட்டார். இது என்னுடைய தவறு அல்ல" என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பெரிய மனுஷன் மாதிரி நடந்துகோங்க.. உங்களோட பப்ளிசிட்டி பைத்தியத்துக்கு அளவே இல்லையா..? இந்த பதிவால் உங்களுடன் பழகியவர்கள் பகீர் ஆகியிருக்க மாட்டார்களா..? என்று விளாசி வருகின்றனர்.

சூர்யா பட இயக்குனருக்கு கொரோனா பாசிட்டிவ்..? - ரசிகர்கள் ஷாக்..! சூர்யா பட இயக்குனருக்கு கொரோனா பாசிட்டிவ்..? - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.