"அதனால, இப்படி ஒரு படம் நடிக்குறீங்க..!" - சூர்யாவுக்கு வேண்டுகோள் வைக்கும் 90ஸ் கிட்ஸ்..!


நடிகர்கள் விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான இளவட்டங்களை ரசிகர்களாக கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. சமீப காலமாக சில சர்ச்சைகளில் சிக்கி கொண்டு தவித்தார். அயன் படத்திற்கு பிறகு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை.

வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்யும் சூர்யா திரைக்கதையில் வழுக்கிறார். இந்நிலையில், சூரரை போற்று படத்தை மலை போல நம்பிக்கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் சூர்யாவின் சூரரை போற்று படமும் தீபாவளிக்கு மோதிக்கொள்ளும் என கோடம்பாக்கத்தினர் கூறுகிறார்கள். இந்நிலையில், சமீப காலமாக இந்தியாவை உலுக்கி வரும் பிரச்சனைகள் இரண்டு. ஒன்று கொரோனா மற்றொன்று 150 கிலோ மீட்டரை ஒரே நாளில் கடந்து வந்து விளைந்த பயிர்களை தின்று அளிக்கும் வெட்டுகிழிகள். 

இந்த இரண்டு பிரச்சனைகளையும் தன்னுடைய ஏழாம்அறிவு மற்றும் காப்பான் படங்களில் காட்டிருப்பார் சூர்யா. இது சீக்ரெட் சமூகத்தின் வேலை, இலுமிநாட்டி வேலை என்று ஒரு பக்கம் விவாதங்கள் போய்க்கொண்டிருகின்றது.

ஆனால், மறுபக்கம் 90ஸ் கிட்ஸ்களின் பஞ்சாயத்தும் போய்க்கொண்டிருகின்றது. இந்நிலையில்,ஏழாம் அறிவு, காப்பான் படத்தில் நீங்கள் காட்டியது நிஜத்தில் நடந்து விட்டது. அதே போல, 90ஸ் கிட்ஸ்களுக்கு கல்யாணம் ஆவது போல ஒரு படம் நடிச்சீங்கனா புண்ணியமா போவும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள் 90ஸ் கிட்ஸ்.


** எப்படியெல்லாம் இறங்கிட்டாங்க..?

"அதனால, இப்படி ஒரு படம் நடிக்குறீங்க..!" - சூர்யாவுக்கு வேண்டுகோள் வைக்கும் 90ஸ் கிட்ஸ்..! "அதனால, இப்படி ஒரு படம் நடிக்குறீங்க..!" - சூர்யாவுக்கு வேண்டுகோள் வைக்கும் 90ஸ் கிட்ஸ்..! Reviewed by Tamizhakam on May 26, 2020 Rating: 5
Powered by Blogger.