கொட்டும் மழையில் சுஷாந்த் சிங் இறுதி சடங்கு - நனைந்தபடி கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்..! - புகைப்படங்கள் இதோ..!


பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் உலுக்கி போட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இதை மறுக்கும் சுஷாந்த் சிங்கின் உறவினர் ஆர்.சி.சிங், சுஷாந்தின் மறைவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மும்பை காவல்துறையினர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் இந்த விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து இறந்ததாக சொல்லும் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியனின் மறைவும் கொலையாக இருக்கும் என தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பாலிவுட் திரையுலகில் வெளியில் இருந்து ஒருவர் வந்து வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இதுகுறித்து பலமுறை பேசியுள்ள சுஷாந்த் சிங், பாலிவுட்டில் பிழைப்பது மிகவும் கடினம். ஒரு படம் தோல்வியடைந்தால் கூட உடனே தன்னை வெளியேற்றிவிடுவார்கள் என ஆதங்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையே சுஷாந்த் சிங், மூச்சு திணறலால் உயிரிழந்ததாக அவரது, உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை கூப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சுஷாந்தின் உடலுக்கு அவரது தோழி ரியா சக்கரவர்த்தி அஞ்சலி செலுத்தினார்.


அவரிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுஷாந்தின் இறுதி சடங்குகள், அவரது உறவினர்கள் முன்னிலையில் மும்பையின் பவன் ஹன்சின் வைல் பார்லே வில் நடைபெற்றது.


சுஷாந்திற்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தாகவும் அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது அவர் மரணமடைந்திருப்பது வேதனையளிப்பதாகவும் அவரது உறவினர்கள் கூறியிருப்பது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


முன்னதாக, மும்பையில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், கொட்டும் மழையிலும் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


கொட்டும் மழையில் சுஷாந்த் சிங் இறுதி சடங்கு - நனைந்தபடி கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்..! - புகைப்படங்கள் இதோ..! கொட்டும் மழையில் சுஷாந்த் சிங் இறுதி சடங்கு - நனைந்தபடி கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்..! - புகைப்படங்கள் இதோ..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.