"அன்பே சிவம்" படத்தை இயக்கியது யார்..? - ரசிகர்களுடன் குடுமிபிடி சண்டை போட்ட நடிகை குஷ்பு..!


இயக்குனர் சுந்தர் .சி இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், மாதவன், நடிகை கிரண் மற்றும் பலர் நடித்து 2003-ம் ஆண்டு வெளிவந்த படம் 'அன்பே சிவம்'. தமிழ் சினிமாவில் இந்தப் படத்திற்கும் தனி இடம் உண்டு.

வசூல் ரீதியாக இந்தப் படம் மண்ணை கவ்வியது என்றாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் பல மொழித் திரைப்படங்களின் தகவல்களை வெளியிடும் IMDb இணையதளத்தில் 'அன்பே சிவம்' படம்தான் 8.7/10.0 ரேட்டிங்கை வாங்கிய முதல் தமிழ்ப்படம்.

இதுவரை வெளியான இந்தியப் படங்களின் ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது "அன்பே சிவம்". இயக்குனர் மணிரத்னம் இயக்கி, கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படம் கூட அதற்கு அடுத்த இடத்தில்தான் உள்ளது என ஒரு கமல்ஹாசன் ரசிகர் டுவீட் போட்டிருந்தார்.

இதனை பார்த்த நடிகை குஷ்பு “படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் எனது கணவர் வீட்டில் இரண்டு வருடங்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்,” என்று தனது கருத்தை கூறினார்.

குஷ்புவின் இந்த பதிலை பார்த்த ரசிகர் ஒருவர் “படம் ஓடியிருந்தாலும், எல்லாருக்கும் தெரியும், கமல்னாலதான் இந்த மாதிரி எடுக்க முடியும், சுந்தர் சியால எடுக்க முடியாது” என கமெண்ட் போட்டார்.

பதிலுக்கு குஷ்பு, “ஆமா சார், நீங்கதான் சுந்தர் சாருக்கு அசிஸ்டென்ட் வேலை பார்த்தீங்களா, போய் வேலை இருந்தா பாருங்க,” என திட்டி கமெண்ட் போட்டார்.


'அன்பே சிவம்' மாதிரியான படத்தை காமெடி படங்களின் இயக்குனரான சுந்தர் .சி இயக்கி இருக்க வாய்ப்பேயில்லை, அதை கமல்ஹாசன் தான் இயக்கியிருப்பார் என்ற சர்ச்சை 17 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

"அன்பே சிவம்" படத்தை இயக்கியது யார்..? - ரசிகர்களுடன் குடுமிபிடி சண்டை போட்ட நடிகை குஷ்பு..! "அன்பே சிவம்" படத்தை இயக்கியது யார்..? - ரசிகர்களுடன் குடுமிபிடி சண்டை போட்ட நடிகை குஷ்பு..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.